
மதுரை: மதுரை நகரில் பல்வேறு இடங்களில் தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு இருப்பதால், கழிவுநீர் செல்ல வழி இல்லாமல், மழை நீருடன் சேர்ந்து ஆறு போல தோற்றமளிக்கிறது. மதுரை என்றாலே ஞாபகத்துக்கு வருவது ,வைகை ஆறு மற்றும் மீனாட்சி அம்மன் கோவில், மல்லிகை பூ தான். ஆனால், தற்பொழுது மதுரை நகரில் புதிய ஆறு தெருக்களில் உருவெடுத்துள்ளது. மதுரை மாநகராட்சி சார்பில், மதுரை நகரில் குழாயில் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அவ்வாறு குழாயில் பதிக்கும் போது, ஒப்பந்ததாரர்கள் தண்ணீர் குடிநீர் குழாயில் உடைத்தும், கழிவு நீர் குழாய்களை சேதப்படுத்தியும் விடுவதால், மழைக்
காலங்களில் ஆங்காங்கே தெருக்களில் கழிவுநீரும் மழை நீரும் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது .
இதனால் சாலைகளில் இருசக்கர வாகனம் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் போது பல்வேறு இடையூறுகள் ஏற்படுவது உடன், பள்ளங்களின் தவறி விழுகின்ற நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து , மதுரை மாநகராட்சி மேயர் ,ஆணையாளர், வார்டு கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர்கள்
கவனத்திற்கு பொது மக்கள் கொண்டு சென்றும், சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூட நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை மேலமடை 36-வது வார்டு மருதுபாண்டி தெருவில், பலத்த மழையால் கழிவு நீரும் மழை நீரும் சேர்ந்து ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதை பார்த்த பொதுமக்கள் மதுரையில் புதிய ஆறு உருவெடுத்துகிறது என கூறியதை கேட்க முடிந்தது.
மதுரை மாநகரில் ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களை, மதுரை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சீர் செய்தும், உடைந்த கழிவுநீர் குடிநீர் குழாய்களை சரிப்படுத்தியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் முத்துராமன் கூறியது:
“மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர், கோமதிபுரம், ஜூபிலி டவுன் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையில் தோன்றிய பள்ளங்கள் சரிவர மூடப்படாததால், மலைக்
காலங்களில் கழிவு நீரும் மழை நீரும் தெருக்களி குளம் போல தேங்கியுள்ளது. மதுரை தாசிலா நகர் மருதுபாண்டியர் தெரு ,காதர் மைதீன் தெரு, அன்பு மலர் தெரு, வீரவாஞ்சி தெரு, அல்லிலி வீதி, திருக்குறள் வீதி ஆகிய பகுதிகளில் சாலையில் ஆறு போல மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதை தடுக்க மதுரை மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.