
திண்டுக்கல்லில் இருந்து மதுரை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டைக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான கோரிக்கைகளுடன் பல்வேறு தரப்பினருக்கும் மின்னஞ்சல் செய்துள்ளனர். இது குறித்து செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தின் செயலாளர் K.H. கிருஷ்ணன் தெரிவித்த போது…
வண்டி எண் 06609 /06610 திண்டுக்கல் மதுரை திண்டுக்கல் இடையே இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு ரயில் திண்டுக்கலில் இருந்து தினசரி காலை 8;00 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு காலை 9:16 மணிக்கு வருகின்ற ரயில் மாலை 6:00மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல்லுக்கு இரவு 7:45மணிக்கு செல்கிறது !
தினசரி காலை 9:16 மணிக்கு மதுரைக்கு வரக்கூடிய இந்த ரயிலை திருப்பரங்குன்றம், திருமங்கலம் , விருதுநகர் , திருத்தங்கல், சிவகாசி , ஸ்ரீவில்லிபுத்தூர் , இராஜபாளையம் , சங்கரன்கோவில் , பாம்புக்கோவில்சந்தை , கடையநல்லூர், தென்காசி , செங்கோட்டை வரை உள்ள மக்கள் பயன்படுத்தும் வகையில் நீட்டிப்பது மிக பயனுள்ளதாகவும் எளிதானதாகவும் இருக்கும்
ஏற்கனவே பல ரயில்கள் நீட்டிப்பு காரணமாக மதுரை செல்லும் மக்களின் நெரிசலை குறைக்கும் வகையில் இந்த திண்டுக்கல் மதுரை திண்டுக்கல் பயணிகள் சிறப்பு ரயிலை சிவகாசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பது நன்று