பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 57.86% சதவீதம் பதிவு ஆனது. குறைந்த பட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% சதவீத வாக்குகள் பதிவு ஆனது.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளனர்.
காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நீன்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது.
அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர். மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 51.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 31 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் 49.94, திருவள்ளூரில் 49.82, திருநெல்வேலி 48.58, மதுரை 47.38, ஸ்ரீபெரும்புதூர் 45.96 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல்லில் 57.67 சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 57.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
4. ஆரணி- 56.73
5. கரூர் – 56.65
6. பெரம்பலூர்- 56.34
7. சேலம்- 55.53
8. சிதம்பரம்- 55.2
9. விழுப்புரம்- 54.43
10. ஈரோடு- 54.13
11. அரக்கோணம்- 53.83
12. திருவண்ணாமலை- 53.72
13. விருதுநகர்- 53.45
14. திண்டுக்கல்- 53.43
15. கிருஷ்ணகிரி- 53.37
16. வேலூர்- 53.17
17. பொள்ளாச்சி- 53.14
18. நாகப்பட்டினம்- 52.72
19. தேனி- 52.52
20. நீலகிரி- 52.49
21. கடலூர்- 52.13
22. தஞ்சாவூர்- 52.02
23. மயிலாடுதுறை- 52.00
24. சிவகங்கை- 51.79
25. தென்காசி- 51.45
26. ராமநாதபுரம்- 51.16
27. கன்னியாகுமரி- 51.12
28. திருப்பூர்- 51.07
29. திருச்சி- 50.71
30. தூத்துக்குடி- 50.41
31. கோவை- 50.33
32. காஞ்சிபுரம்- 49.94
33. திருவள்ளூர்- 49.82
34. திருநெல்வேலி- 48.58
35. மதுரை- 47.38
36. ஸ்ரீபெரும்புதூர்- 45.96
37. சென்னை வடக்கு- 44.84
38. சென்னை தெற்கு- 42.10
39. சென்னை மத்தி- 41.47
சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக காணப்படுகிறது. தமிழகத்தின் மற்ற தொகுதிகளை ஒப்பிடுகையில் சென்னை மக்களிடம் வாக்களிக்கும் ஆர்வமில்லை. குறைந்த வாக்குப்பதிவு கொண்ட தொகுதிகளாக வட, மத்திய, தென் சென்னை தொகுதிகள் உள்ளன. தென்சென்னையில் 42.10 சதவீதமும், வடசென்னையில் 44.84 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. பொது விடுமுறை அளித்தும் சென்னை மக்கள் வாக்களிக்க வராமல் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58 வாக்குகள் பதிவாகி இருந்தது. மிகக் குறைந்த அளவாக மத்திய சென்னையில் 20.09 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. பெரும்பாலான தொகுதிகளில் 24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
பொதுவாக சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்து வருகிறது. தெற்கு, வடக்கு, மத்திய சென்னை என மூன்று தொகுதிகளிலும் 20 முதல் 22 சதவீத வாக்குகள்தான் 11 மணி வரை பதிவாகியுள்ளன. மதுரையிலும் 22.73 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது..பகல் ஒருமணி நிலவரப்படி தமிழகத்தில் 40.5சத வாக்கு பதிவாகியுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் 40சதத்திற்குமேல் வாக்கு பதிவானது.அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 44.8சதம் வாக்கு பதிவானது.விருதுநகர் கன்னியாகுமரி உட்பட பல தொகுதியில் 40சதத்திற்குமேல் பதிவானது.
இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையவிருக்கிறது. கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 6 கோடியே 23 லடச்த்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் 950 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
“அந்தவகையில் 7 கட்ட தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
தமிழ்நாடு (39), அருணாசல பிரதேசம் (2), அசாம் (5), பீகார்(4), சத்தீஷ்கார் (1), மத்திய பிரதேசம் (6), மராட்டியம்(5), மணிப்பூர் (2), மேகாலயா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), திரிபுரா (1), உத்தரபிரதேசம் (8), உத்தரகாண்ட் (5),மேற்கு வங்காளம் (3), அந்தமான்-நிகோபார் (1), காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்து வருகிறது.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் சூறாவளியாக சுழன்று வாக்கு சேகரித்தனர். ஒரு மாதமாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது. அத்துடன் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகளும் மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இந்த 102 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. அருணாசலபிரதேசம் போன்ற சில மாநிலங்களில் 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிக்கப்படும்.என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.