
- முரு. தெய்வசிகாமணி
பொதுவாக மாத சம்பளக்காரர்களின் ஒரே முக்கிய சேமிப்பாக இருப்பது PF என்று சொல்லப்படுகின்ற Provident Fund. அதற்கு காரணம் சம்பளம் கொடுக்கிற நிறுவனம் ஒரு சிறு Contribution ஐ Emoloyee க்கு சம்பளமாக நேரடியாக கொடுக்காமல், அவரின் ஓய்வுக்காலத்திற்காக பிடித்து, அரசின் EPFO நிறுவனத்தில் செலுத்தும் அதற்கு நிகரான பிடித்தத்தை அந்த நபரின் சம்பளத்தில் இருந்தும் பிடித்தம் செய்யும்.
அது ஒரு சிறிய தொகையாக இருந்தாலும், நாளடைவில் ஒரு பெரிய தொகையாக மாறும். காரணம் அந்த தொகைக்கு, அதற்கு கொடுக்கப்படும் வட்டிக்கு, Income Tax இல்லை என்பது காரணமாகும். அதற்கு வரி விலக்கு இருப்பதால் கனிசமானவர்கள் Voluntary Contributions ஆக ஒரு கூடுதல் தொகையையும் தங்களது சம்பளத்தில் இருந்து செலுத்துவார்கள் என்பதால் அது நாளடைவில் ஒரு கனிசமான தொகையாக மாறி ஓய்வு பெறும்போது ஒரு பெரிய தொகையாக உதவும்.
IT போன்ற துறைகளில் இருக்கும் பெரும்பாலான நபர்கள் அடிக்கடி நிறுவனத்தை மாற்றும்போது அந்த பழைய ஓய்வூதிய தொகை புதிய கணக்கிற்கு மாற்ற காலதாமதமாகும் என்பதால் அதை எடுத்துவிடுவார்கள். அதனால் எனது நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு போகிறவர்களிடம் நான் அதை திரும்ப பெறவேண்டாம் என்று அறிவுருத்துவேன்.
அதற்கு காரணம் அந்த தொகை செலுத்தவும், கிடைக்கும் வட்டிக்கும், பின் திரும்ப எடுக்கும்போதும் அதற்கு Exception இருப்பதாலும், அது அரசின் பாதுகாப்பில்.இருப்பதும், ஓய்வு பெற்ற பின்பு குழந்தைகளை சார்ந்திருக்காமல் இருக்கவும் அது உதவுமென்பதால்.
அப்படி வளர்ந்த தொகை நாம் ஓய்வுபெரும்போது அல்லது முக்கியமாக குழந்தைகளின் திருமணம் அல்லது மருத்துவ செலவுகள் அல்லது வீடு கட்ட என்ற காரணத்திற்காக அதை திரும்ப பெறலாம் அல்லது அதன் பெயரில் க்டன் வாங்கலாம். அப்படி சேமித்த அந்த தொகையை ஓய்வு பெரும்போது அல்லது வயதின் 55 ஆண்டுகள் முடிவுபெற்றபின் பெற வழி வகை உண்டு.
அப்படி ஓய்வுபெற்ற தொகையை.நாம் ஓய்வு பெற்ற மூன்று ஆண்டுகளுக்குள் திரும்ப பெறவேண்டும். அப்படி செய்யாவிட்டால் அதற்கு கொடுக்கப்படும் வட்டி மூன்று ஆண்டுகளுக்கு பின்பு நிறுத்திவிடுவார்கள். அதனால் அதை திரும்பப்பெற்று வேறு ஏதாவது ஒரு வங்கியில், நிறுவனத்தில், அல்லது பங்கு முதலீட்டில் முதலீடு செய்து மாதாமாதம் அரசு ஊழியர்கள்போல ஓய்வூதியம் இல்லாத தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள், ஓய்வூதியம் போல ஒரு தொகையை பெறுவார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட முதலீடுகள் அதிக வட்டிக்காக ஆசைப்பட்டு அல்லது Mutual Fund போல பங்குச்சந்தை போன்றவற்றில் அல்லது தனியார்களிடம் கொடுத்து அதை இழப்பது என்பது காலகாலமாக நடக்கும் விஷயம். அதற்கு பதிலாக அரசே ஏன் அந்த தொகையை தன்னிடமே வைத்துக்கொண்டு, மாதாமாதம் ஒரு தொகையை கொடுக்க கூடாது என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்தது.
அப்படி இருந்த கோரிக்கைக்கு மத்திய அரசு ஒரு தீர்வை இப்போது கொடுத்துள்ளது. அதன்படி PF பணத்தை மாதாமாதம் அல்லது மூன்று மாதங்கள், வருடா வருடம் என்று ஏதாவது ஒரு இடைவெளியில் நாம் திரும்ப பெறலாம். அதனால் அந்த தொகை அரசிடம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் அதற்கு வரி விலக்கு உண்டா இல்லையா என்பதை சட்டமாக அல்லது ஒரு GO ஆர்டராக மத்திய அரசு போடும்போதுதான் தெரியும்.
நான் சென்ற வருடமே ஓய்வு பெற்ற பின்னால், அதை திரும்ப பெறவில்லை. ஆனால் எனது நண்பர்கள் அதை முழுவதுமாக திரும்ப பெற்றுவிட்டார்கள். அவர்களால் இப்போது இந்த திட்டத்தில் சேரமுடியாது என்பதால், IT போன்ற துறைகளில் இருந்து வெளி வருகிறவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு. எனவே இந்த ஓய்வூதிய தொகையை திரும்ப பெறும் முயற்சியில் இருப்பவர்களுக்கு உடனே தெரிவித்து தவிர்க்க உதவுங்கள் (அதற்காக இந்த பதிவை பலருக்கு பகிருங்கள்).
அதுமட்டுமல்லாமல் EPFO வில் அதிக வட்டியாக 8.25% கொடுக்கிறார்கள். அது வேறெந்த வங்கியை விடவும் சிறந்தது. அதுமட்டுமல்லாமல் வஙகிகள் திவாலானால் நாம்.ல் கோடியில் டெபாஸிட் வைத்திருந்தாலும் 5 லட்சம் (தற்போது தொகையை RBI அதிர்கரித்துள்ளது) மட்டும் உறுதியாக கிடைக்கும். ஆனால் இங்கே அந்த பிரச்சினை இல்லை, ஏனெனில் முழு தொகையும் அரசின் பாதுகாப்பில் உள்ளது.
இப்போது சில தனியார் நிறுவனங்கள் DKM போன்ற தனியார் சார்ந்த PF Trust களில் அதை வைத்திருக்கலாம். அவர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தாது என்றாலும், விரைவில் அவர்களுக்கும் வந்துவிடும். இல்லையெனில் அந்த தனியார் ட்ரஸ்ட்களில் போடப்பட்ட ஓய்வூதியத்தை அரசின் PF நிறுவனத்திற்கு மாற்றிவிடுவார்கள். இதை கொண்டுவரும் மத்திய அரசுக்கு கோடான கோடி நன்றிகள்.
எனவே தற்போது PF Contributions செய்பவர்கள் தங்களது பங்களிப்பை அதிகரிக்கவும். ஆனால் வருடத்திற்கு 1.5 லட்சம் வரைதான் 80 CCC இல் வரி விலக்கு பெறமுடியும். அதற்கு மேலே செய்தால் அது வரிவிலக்கு கிடைக்காது என்பதால், அவர்கல் NPS என்ற புதிய பென்ஷன் திட்டத்தில் கூடுதலாக முதலீடு செய்தால் 80 CCD(2) என்பதன் கீழ் வரி விலக்கினை பெறலாம்.
இந்த பாதுகாப்பான ஓய்வூதியம் என்பது அமெரிக்காவின் 402 க்கு இணையாகவல்ல அதற்கு மேல் பாதுகாப்பானதாக சொல்லலாம். அதனால் மக்கள் தங்கள் ஓய்வு காலம் பாதுகாப்பு என்று ஆவதால் செலவை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் வேகப்படலாம்.
எனவே இந்த இரண்டு திட்டங்களையும் பயன்படுத்தி, PF Contributions ஐ திரும்ப பெறாமல், உங்கள் ஒய்வு காலத்தை வளமாக்கி, நலமாக்குங்கள்.
#Indhea


