புதுக்கோட்டை அருகே ஆலங்குடி என்ற இடத்தில் உள்ள பெரியார் சிலையின் தலை சமீபத்தில் சேதப்படுத்தப்பட்டது. இந்த சிலை இந்து ஆதரவாளர்கள்தான் சேதப்படுத்தியதாக திமுகவினர் பொங்கி எழுந்தனர். ஆனால் கடைசியில் இந்த சிலையை உடைத்தவர் திமுகவை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் என்பது தெரியவந்தது
இந்த நிலையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியின் முன்பு கடந்த 20-ந் தேதி பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தின் போது ராமர் படத்தை பேராசியர் ஜெயராமன் அவமதித்ததாக தெரிகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பேராசிரியர் ஜெயராமன் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது
இந்த புகாரை விசாரணை செய்த போலீசார் இன்று பேராசிரியர் ஜெயராமனை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது ஒரு பேராசிரியரே இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டால் அவரிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி இருப்பார்கள் என்று சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகிறது.