தமிழகம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி தண்ணீருக்காக போராடி வருகிறது.காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. சுப்ரீம் கோர்ட் என்ன, ஐநாவே சொன்னாலும் கர்நாடக அரசு தண்ணீர் விடாது. ஏனெனில் எந்த ஆட்சியின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு தண்ணீர் விடப்படுகின்றதோ, அந்த ஆட்சி அதற்கு பின்னர் கர்நாடகாவில் அஸ்தமனம் ஆகிவிடும்
எனவே காவிரிக்கான சட்டப்போராட்டம் ஒருபக்கம் இருந்தாலும் காவிரி நீர் இல்லாமல் தமிழகத்தால் சமாளிக்க முடியாதா? ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை பொய்த்து வறண்ட பூமியாகவா தமிழகம் உள்ளது. தேவைக்கும் அதிகமான மழை பெய்யத்தான் செய்கிறது. ஆனால் அதை தேக்கி வைக்க எந்த புதிய அணைகளும் கட்டப்படவில்லை. போதாக்குறைக்கு ஏரி, குளம், கண்மாய் எல்லாவற்றையும் ஆக்கிரமிப்பும் செய்தாகிவிட்டது.
கருணாநிதி ஆட்சியில் கொடுக்கப்பட்ட கலர் டிவிக்கு கொடுத்த ரூ.48,000 கோடியில் மேட்டூர் அணைபோல் 4 அணைகள் கட்டியிருக்கலாம். அதேபோல் ஜெயலலிதா ஆட்சியில் கொடுத்த மிக்ஸி கிரைண்டர் ரூ.64,000 கோடியில் 6 பெரிய அணைகள் கட்டியிருக்கலாம். ஏன் செய்யவில்லை. எல்லாம் ஓட்டு அரசியல் எனவே காவிரி போராட்டம் என்பதே ஒரு அரசியல். இந்த அரசியலில் சிக்காமல் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.