நடிகர் விவேக் அவ்வப்போது மக்களுக்கு தேவையான விழிப்புணர்ச்சி கருத்துக்களை தனது டுவிட்டரில் கூறி வரும் நிலையில் தற்போது காவிரி தாயும் அவரும் உரையாடுவது போன்ற ஒரு கவிதையை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். கருத்தாழமிக்க இந்த கவிதை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
நான்:- காவிரித் தாயே. கருணைத் தாயே.
கன்னட மண்ணில் பூ விரித்தாயே.
ஏன், தமிழ்மகன் கேட்டால் கை விரித்தாயே?.
காவிரி:- முத்து மகனே. முட்டாள் மகனே.
கைவிட்டது நானா நீயா?.
செழித்துப் பாய்ந்தேன்; நீ சேமித்தாயா?.
ஆழியில் (கடலில்) கலக்குமுன் அணை செய்தாயா?.
நான்:- இனி நான் என்ன செய்ய?, சொல்வாயா?.
காவிரி:- சினிமா பார்த்து சிரி. கிரிக்கெட், பாப்கார்ன் கொரி. மழுங்கிப்போனதே உன் வெறி.
நான்:- தாயே என்னை மன்னிப்பாயா?.
காவிரி:- எழுந்து நில். தயக்கம் கொல்.
இரைப்பை நிரப்புவது கலப்பை.
இதை உணராதவன் வெறும் தோல் பை.
நான் உனக்கும் அன்னை.
கன்னடர் உந்தன் உடன் பிறப்பு.
காவிரியும் உனது நீர்ப்பரப்பு.
இதை உரக்கச் சொல்.
உரிமை வெல்.
@dinathanthi @dinamalarweb @manam_online @polimernews @PTTVOnlineNews Me n Mother Kaveri talking with each other! pic.twitter.com/kIxxfDwHjP
— Vivekh actor (@Actor_Vivek) April 10, 2018