மலேசியாவில் நடைபெற உள்ள பெண்கள் ஆசிய கோப்பைக்கான ஹர்மன்பிரித் கவுர் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து அணிகள் பங்கேற்க உள்ள பெண்கள் ஆசிய கோப்பை T-20 போட்டியில் வரும் ஜூன் 1 முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.
எல்லா அணிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி, புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் இரண்டு அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று பிசிசிஐ செயல் தலைவர் அமிதாப் சவுத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளிடையே நட்புறவை வளர்க்கும் நோக்கில் நடத்தப்படும் ஆசிய கோப்பை T20 கிரிக்கெட் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி வீராங்கனைகள் விபரம்: ஹர்மன்பிரித் கவுர், சுமிரிதி மந்தனா, மித்தாலி ராஜ், ஜெமிமாஹ் ரோட்ரிஜிஸ், தீப்தி சர்மா, அனுஜா படேல், வேதா கிருஷ்ணமூர்த்தி, தனியா பந்தியா, ஜுவாலன் கோசாமி, பூஜா, ஷேக்கா பண்டே, பூனம் யாதவ், ராஜேஸ்வரி, ஏக்தா, மோனா