இங்கிலாந்து, ஜிம்பாவே சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு டிம் பேயன் மற்றும் ஆரோன் பின்ச் முறையே ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளுக்கான கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கு துணை கேப்டனாக பின்ச் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் நடக்கும் ஒரு T-20 போட்டிக்கும், ஜிம்பாவேயில் நடக்கும் மூன்று T-20 போட்டிகளுக்கும் துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஜூன் 13ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு முன்பு இந்த இரு அணிகளும் ஒரு T-20 போட்டியில் விளையாட உள்ளன.