தென்மேற்கு பருவ மழை கொட்டித் தீர்க்கப் போவுது… அதுவும் முன்கூட்டியே!

rain rain - 2026

கொட்டித் தீர்க்கப்போகும் தென்மேற்கு பருவமழை. இந்த வருஷம் முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் மே மாதம் இறுதியிலோ அல்லது ஜுன் முதல் வாரத்திலோ வழக்கமாக தென் மேற்கு பருவ மழை தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கும் என்றும், அதுவும் மழை கொட்டித் தீர்க்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நல்ல செய்தியால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது தமிழகத்தில் கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. ஆனாலும் கோடை வெயிலை தணிக்கும் வகையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இது கோடை மழை என்றாலும், தமிழக விவசாயிகளும், பொது மக்களும் பெரிதும் எதிர்பார்த்திருப்பது தென் மேற்கு பருவ மழைதான்.

தென் மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை மே மாதம் இறுதியிலோ அல்லது ஜுன் மாதம் முதல் வாரத்திலேயோ அந்தமான் தீவுப் பகுதியில் இருந்து தொடங்கும்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

ஆனால் இந்த ஆண்டு வரும் 19 அல்லது 20 ஆம் தேதி அந்தமானில் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை 10 நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கும். அந்தமானில் வரும் 19 அல்லது 20ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

கேரளாவில் வரும் 22ஆம் தேதி மழை தொடங்குகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி பகுதிகளில் 23ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை நன்கு பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆராய்ச்சி ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மற்றப் பகுதிகளில் வெப்பச் சலன மழை பெய்யும். வரும் 12ஆம் தேதி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். சென்னையில் வரும் 14ஆம் தேதி முதல் சென்னையில் மழை பெய்யும்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

கடந்த ஆண்டைப் போல் அல்லாமல், நடப்பாண்டில் நிலத்தடி நீர் அளவு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories