நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையிலுள்ள மேல்க்கனிநாடு, புதுவளவு பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கராசு (வயது-52) . இவரது மனைவி கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.அவரது மகன் அசோகன் (வயது-32). அவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டாரஸ் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார்.
கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ரேவதி (வயது-22) என்ற பெண்ணுக்கும் அசோகனுக்கும், இடையே திருமணம் நடைபெற்றது. திருமணமான பிறகு அசோகன் தனது மனைவியுடன் தந்தை வசிக்கும் வீட்டிலேயே கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். இவர்களுக்கு மனோபாலா (5), துளசிபாலா (4) என 2 மகன்கள் உள்ளனர்.
அசோகன் லாரி டிரைவர் என்பதால் தொடர்ந்து இருபது நாள், ஒரு மாதம் என வெளியூருக்கு சென்று விடுவார். இந்த நிலையில் மாமனார் தங்கராசுக்கும், மருமகள் ரேவதிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் அரசல் புரசலாக ஊருக்குள் பரவியது. இது பற்றி உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் அசோகனிடம் மனைவியின் நடத்தை குறித்து கூறியுள்ளனர்.
இதனால், அவமானமடைந்த அசோகன் மனைவி மற்றும் தந்தை இருவரையும் கண்டித்துள்ளார். தங்களுக்குள் தவறான தொர்பில்லை இருவரும் மறுத்துள்ளனர். ஆனாலும்,
இந்நிலையில், மனைவியையும் தந்தையயும், கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட அசோகன், நேற்று காலை லாரி நிறுவனத்தின் உரிமையாளர் கல்கத்தாவுக்கு லாரியை எடுத்துக்கொண்டு போகவேண்டும் உடனே வா என்று சொல்வது போல வேறு ஒரு நபரிடமிருந்து தனது கைப்சிக்கு தகவல் வருவது போல ஏற்பாடு செய்து, தனது மனைவி மற்றும் வீட்டிலுள்ளவர்களுக்கு சொல்லிவிட்டு நாமக்கல் சென்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரேவதியும் தங்கராசுவும், வீட்டிற்குள் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, வேலைக்கு செல்வது போல் சென்றிருந்த அசோகன் திடீரென வீட்டுக்குள் நுழைந்தார். அங்கு தந்தையுடன் மனைவி உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர். மனைவி மற்றும் தந்தை தங்கராசுவுடன் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த அசோகன் வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து வந்து தங்கராசுவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில், மண்டை இரண்டாக பிளந்த நிலையில் வீட்டில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேய தங்கராசு பரிதாபமாக இறந்தார்.
புதுவளவு பகுதி மக்கள் வீட்டின் முன்பு கூடினர். இந்த சம்பவம் குறித்து வாழவந்திநாடு காவல் துறையி்னருக்கு தகவல் கிடைத்தது. மேலும் மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீப்போல பரவியது. தகவல் அறிந்ததும் காவல் துறையி்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கராசு உடலை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது. அசோகன் தன் தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு போலீசாரிடம் சரணடைந்தார்.



