கட்டுக்கட்டாக குப்பையில் வீசப்பட்டுக் கிடந்த காலா திரைப்பட டிக்கெட்டுகள்

Published:

01 June7 kala - 2026சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்க வளாகத்தில் காலா திரைப்படத்துக்கான டிக்கெட்டுகள் குப்பையில் வீசப்பட்டிருந்தன. காலா திரைப்படம் இன்று தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகியுள்ளது.

ரோகிணி திரையரங்க வளாகத்தில் ரோகினி , ராகினி, ரக்சினி, ருக்மணி, ரூபிணி, ஆகிய 5 திரையரங்குகளில் 7 காட்சிகளும் ரந்தினி திரையரங்கில் மட்டும் 4 காட்சிகளுமாக மொத்தம் 39 காட்சிகள் திரையிடப்படுகின்றன.

இந்நிலையில் ராகினி, ரக்சினி, ரந்தினி ஆகிய மூன்று திரையரங்குகளில் 7.15 மணிக் காட்சிக்கான டிக்கெட்டுகள் கட்டுக்கட்டாக குப்பையில் வீசப்பட்டுக் கிடந்தன.

திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்பதற்காக முன்கூட்டியே மொத்தமாக பதிவு செய்தவர்கள் கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை விற்க முடியாததால் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img