நீங்க என்ன எம்ஜிஆரா? இல்லை ஜெயலலிதாவா? என தமிழக முதல்வருக்கு ரஜினி கேள்வி எழுப்பினார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை காமராஜர் அரங்கில் திரையுலகினர் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நடிகர் ரஜினி பேசியதாவது: கருணாநிதியின் இறுதிச்சடங்கில் எத்தனை மாநில முதல்வர்கள் பங்கேற்றார்கள். தமிழக முதல்வர் பங்கேற்று இருக்க வேண்டாமா. நீங்கள் என்ன எம்ஜிஆரா, ஜெயலலிதாவா இல்லை அவர்களை விட பெரும் தலைவர்களா?
மெரினாவில் அவருக்கு இடம் கொடுக்க கோர்ட் அனுமதித்தது. நல்லவேளை நீங்கள் மேல் முறையீடு செய்யவில்லை. இல்லையென்றால் நானே இறங்கி போராடி இருப்பேன் என்றார்.



