400மீ தடைதாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளி வென்றார்

Published:

15 Aug27 Asain games - 2026

ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலெம்பாங்கில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தின் இறுதிச் சுற்று நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தருண் அய்யாசாமி, சந்தோஷ் குமார் தமிழரசன் ஆகியோர் இந்தியா சார்பில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்கள். இவர்களுடன் மேலும் 6 பேர் கலந்து கொண்டனர்.

இதில் தருண் அய்யாசாமி 48.96 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த வெள்ளிப் பதக்கம் வென்றார். இது அவருடைய சிறந்த ஓட்டமாகும்.

கத்தார் வீரர் அப்தேரஹ்மான் சம்பா 47.66 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீரர் சந்தோஷ் குமார் 49.66 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த 5-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

Related articles

Recent articles

spot_img