தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நகைக்கடன், பயிர் கடன், மத்திய கால கடன்கள் நிறுத்தப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
தமிழகம் முழுவதும் 4,464 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகிறது.இந்த சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு நகைக்கடன், பயிர் கடன், வழங்கப்பட்டு வந்தது.
மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் 9.15. சதவிகித வட்டிக்கு வாங்கி விவசாயிகளுக்கு 11.15 சதவிகித வட்டியில் நகை அடமானம் வைக்க விவசாயிகள் முன்வருவதில்லை. இதனால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பல நஷ்டத்தில் இயங்குகின்றது.
நபார்டு மூலம் தங்களுக்கு நேரடியாக கடன் வழங்கக்கோரியும், உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த திங்கள் முதல் தமிழகம் முழுவதும் நகைக்கடன், பயிர் கடன் வழங்காமல் போராட்டத்தில் அதன் செயலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கிராமப்புற விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.