18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வழங்கப் பட்டது. 18 எம்.எல்.ஏ.க்கள் மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டன.
இதனால் பெரும்பான்மை பலத்துடன் எடப்பாடி அரசு நீடிக்கிறது.
தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சி.வி.சண்முகம், ஜெயலலிதாவின் ஆட்சிக்கு வெற்றி; துரோகிகளுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார்.
இதனிடையே… அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே… 18 பேருடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட முடிவெக்கப்படும் என்று- டிடிவி தினகரன் கூறினார்.
இந்நிலையில் இனி, யார் யாருக்கு ரகசியமா குழந்தை பொறந்திருக்கு என்கிற விவரத்தை வெற்றிவேல் தொடர்ந்து வெளியிடுவார்…. என்று சமூக வலைதளத்தில் கருத்துகள் கூறப்படுகின்றன…




