தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து 18 பேருடன் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று – தினகரன் கூறினார்.
இன்று மாலை குற்றாலம் சென்று 18 பேருடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என்று- டிடிவி -தினகரன் கூறினார்.
எடியூரப்பா வழக்கில் எப்படி உச்சநீதிமன்றம் தகுதிநீக்கம் செல்லாது என கூறியதோ, அதே போல் இந்த வழக்கிலும் நடக்க வாய்ப்புள்ளது.
மேல்முறையீடா ? தேர்தலை சந்திப்பதா ? என்பது குறித்து கூறிய தினகரன்…18 எம்எல்ஏக்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப் படும் என்றார்.
தீர்ப்பால் தொண்டர்கள் , எம்எல்ஏக்கள் மேலும் எங்கள் பக்கம் இணைவர் என்று நம்பிக்கை தெரிவித்த தினகரன், துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும் , மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார்.
முன்னதாக *18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியது.
*18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு.
*18 எம்எல்ஏக்கள் நீக்கம் சட்டவிரோதமானது இல்லை
*சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என்று நீதிபதி சத்யநாராயணன் கூறி இருந்தார்்




