ஆளுநரை பார்த்தது மட்டுமே எங்கள் மீதான குற்றச்சாட்டு என கூறியுள்ள தங்க தமிழ்ச்செல்வன்… நீதிபதியின் தீர்ப்பை பார்த்து சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை என்று கூறினார்.
இதனிடையே தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து 18 பேருடன் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் – இன்று மாலை குற்றாலம் சென்று 18 பேருடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என்று டிடிவி -தினகரன் கூறினார்.
இந்நிலையில் 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப் பட்டிருக்கிறது.
18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.




