வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப் பட்டிருப்பதாகவும், வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடிக்கு மேல் வரிஏய்ப்பு செய்திருப்பதாகவும், ரூ.2500 கோடி வரை கணக்கில் காட்டாத வருவாய் கண்டறியப் பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 6 நாட்களாக 90 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில், இந்த நிறுவனம் ரூ.800 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளது. ரூ.1,800 முதல் ரூ.2500 கோடி வரை கணக்கில் வராத சொத்துகள், வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் மூலம் முதலீடு ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




