பத்திரிக்கையாளரை நாங்கள் காறி துப்பம் முன் விஜயகாந்த் காறி துப்பி விட்டார் : மனுஷ்யபுத்திரன்

 

திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் ஸ்டாலினையும், மட்டும் கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளரை நாங்கள் காறித் துப்ப நினைத்தோம். ஆனால் அதற்கு முன் விஜயகாந்த் காறி துப்பி விட்டார். பாராட்டதக்கது என திமுக தலைமை கழக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தேவர்திடலில் அதிமுக ஆட்சியின் அவலத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் பங்கேற்று சிறப்புரை ஆற்றியபோது பேசியதாவது :-

சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடும் வெள்ளத்தில் சிக்கி பல லட்சம் மதிப்புள்ள பொருள் இழப்பு அடைந்த மக்களுக்கும் உயிரிழந்தவர்களுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.5000 வழங்கியது ஈமச்சடங்கிற்கா எனவும் மக்கள் இதற்கு தக்கபாடத்தை வரும் தேர்தலில் அதிமுகவின் முகத்திரையை கிழித்து வெளிப்படுத்துவார்கள் .இன்றைக்கு குற்றவாளி என்ற முத்திரையை அதிமுக மீது மக்கள் குத்தியுள்ளனர்.

அதிமுக ஆட்சியை மீண்டும் வரவழைத்தால் மக்கள் தங்களைத் தாங்களே தற்கொலை செய்து கொள்வதற்கும், தங்கள் முகத்தில் செருப்பா ல் அடித்துக் கொள்வதற்கும் சமம் எனவும் அதிமுக அரசுக்கு சாதகமாக மறைமுகமாக செயல்பட்டு வரும் 3வது அணியை மக்கள்தூக்கி எறிவார்கள் எனவும் ஜாதிக்கட்சியை வளர்த்து தாங்கள்தான் முதலமைச்சர் என தப்பட்டம் அடித்துவரும் கட்சியையும் மக்கள் விரட்டியடிப்பார்கள் எனவும் பேசினார்.

மேலும் சென்னையில் விஜயகாந்த் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தூ என காறி துப்பியது சரியானது எனவும் அவர் காறி துப்பவில்லை என்றால் நாங்களே காறிதுப்புவதாக இருந்தோம் எனவும் மனுஷ்யபுத்திரன் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், மாவட்ட துணை செயலளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன், லதாஅதியமான் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்த்தில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக நகர செயலாளர் நாகராஜன் நன்றி தெரிவித்தார்.

பத்திரிக்கையாளரை நாங்கள் காறி துப்பம் முன் விஜயகாந்த் காறி துப்பிவிட்டார் என திமுக தலைமை கழக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் பேசிய காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சிவகுமார், செய்தியாளர்