ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உத்ஸவம் தொடங்கியது
வைகுண்ட ஏகாதசியின் பகல்பத்து முதல் நாளான இன்று நம்பெருமாள் நீள் மூடி கொண்டை, வைர அபய ஹஸ்தம், காசு மாலை, முத்து மாலை ஆகியவை சாற்றிக் கொண்டு, ஆழ்வார்கள் புடைசூழ எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்
பெருமாளின் திருமுடி திருவடி சேவையை ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசித்தனர். வரும் டிசம்பர் மாதம் 18ம் தேதி அதிகாலை 5.30க்கு ஸ்ரீரங்கத்தில் பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது!








