செங்கோட்டை கேசவபுரத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி!

Published:

IMG 20181214 WA0043 e1544850433830 - 2026

நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம், பகவதிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்கின் சார்பில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு சங்கத் தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். துணை தலைவர் மாரியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

IMG 20181215 113748 2 - 2026

இந்த கடன் வழங்கும் விழாவிற்கு, செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 12 பேருக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான கடன்களை வழங்கினார்.

IMG 20181214 120621131 1 - 2026

மேலும் விவசாயிகளுக்கு ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கூட்டுப் பொறுப்புக்குழு முதலீட்டுக் கடன் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பிச்சையா,மாரிதுரை, ஆறுமுகம், கோபால், முருகன், நஜிமாள், சீனித்துரை, மாரித்துரை, உமா ராஜேந்திரன், செண்பகவல்லி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

IMG 20181215 113920 1 - 2026
ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

Related articles

Recent articles

spot_img