தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அமைத்திட வலியுறுத்தி பாவூர்சத்திரத்தில் தென்காசி தனி மாவட்ட இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அமைத்திட வேண்டும் என்று தென்காசி மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் இந்நிலையில் ஆவுடையானூர் ராமஉதயசூரியன் தென்காசி தனிமாவட்ட இயக்கம் துவக்கி அதன்முலம் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து தென்காசி தனி மாவட்ட இயக்கம் சார்பில் பாவூர்சத்திரம் காமராசர்சிலை அருகில் தென்காசி தனி மாவட்ட இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பாளர் ராமஉதயசூரியன் தலைமை வகித்தார், சென்னெல்தாபுதுக்குளம் ராமசாமி, மதிமுக மாவட்ட பிரதிநிதி ஆசிரியர் சொக்கத்தங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கீழப்பாவூர் வட்டார தலைவர் முருகேசன், நகர செயலாளர் அய்யத்துரை, விடுதலைசிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் துரைஅரசு, செயற்குழு உறுப்பினா வர்க்கீஸ், நாம்தமிழர் கட்சி ஒன்றிய நிர்வாகி ராசு, திராவிடர் விடுதலைக்கழகம் அன்பரசு, மாசிலாமணி, ஆதிதமிழர் பேரவை மணிவேல், தமிழபுலிகள் குமரேசன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்
அருணாப்பேரிகலையரசன் வரவேற்று பேசினார் ஆர்ப்பாட்டத்தில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம அமைத்திட வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மதிமுக தென்காசி நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், கடையம் ஒன்றிய செயலாளர்மதியழகன், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர்கள் மருதப்பபாண்டியன், தண்ணீர் தண்ணீர் செல்வம், மானூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மன்னார் கோயில் பஞ் தலைவர் சண்முகவேல், ஆலங்குளம் நகர செயலாளர் அருணா,அம்பை ஒன்றிய செயலாளர் தவசிபாண்டியன், நகர செயலாளர் முத்துசாமி, ரெங்கசாமி, வேல்ராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்
தட்சணமூர்த்தி நன்றி கூறினார்
தென்காசியை தனி மாவட்டமாக அமைத்திடவேண்டி ஆர்ப்பாட்டம்
Popular Categories



