சென்னை:
பிரபல காந்தியவாதியும், பழம்பெரும் எழுத்தாளருமான லா.சு. ரங்கராஜன் சென்னையில் இன்று காலமானார்.
மகாத்மாவின் எழுத்துக்களை ஆங்கிலத்தில் நூறு தொகுதிகளாகக் கொண்டு வந்த பணியில் அமரர் கே. சுவாமிநாதனுடன் இணைந்து உழைத்தவர். `மகாத்மா காந்தி படைப்புகள் – ஒரு சிறப்புத் தொகுப்பு` என தமிழில் 5 தொகுதிகளை வழங்கியவர். கணையாழி கி.கஸ்தூரிரங்கனின் நெருங்கிய நண்பராக இருந்தவர். பாரதமணி உள்ளிட்ட காந்திய இதழ்களில் அதிகம் கட்டுரைகளை எழுதியுள்ளார். சிறந்த எழுத்தாற்றல் மிக்க லா.சு.ரங்கராஜன்,
தேசியக் கண்ணோட்டத்தில் பெரும்பாலான இதழ்களிலும் கட்டுரைகளை எழுதிக் குவித்தவர். கலைமகள், அமுதசுரபி, விஜயபாரதம், கல்கி, தினமணி உள்ளிட்ட பல்வேறு இதழ்களிலும் எழுதியுள்ளார். குறிப்பாக, தீபாவளி மலர்களில் வருடம் தவறாமல் இவருடைய கட்டுரைகள் இடம்பெறும்.



