இந்திய தேசிய கொடியை எரித்து முகனூலில் புகைப்படமாக வெளியிட்ட இளைஞர் !

தமிழகத்தை சேர்ந்த திலிபன் மகேந்திரன் என்ற இளைஞர் இந்திய தேசிய கொடியை எரித்து அதை புகைப்படமாக எடுத்து முகனூலில் வெளியிட்டுள்ளார்.
 
அந்த இளைஞரது முகனூல் பக்கத்தில் அளித்துள்ள விபரத்தில் அவர் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் என்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து தற்போது சென்னையில் வசித்து வருபவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த ஜனவரி 25ம் தேதி திலிபன் மகேந்திரன் அவரது முகனூலில் பக்கத்தில் நாளைக்கு எத்தன தமிழ்தேசியவாதிங்க இந்திய கொடிய எரிச்சி பேஸ்புக்ல போட்டோவ போட்ராங்கன்னு பாப்போமே…
 
நாளைக்கு நான் எரிக்கிறேன்… என்றும் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் பாலன் தோழர் ( Balan tholar ) என்பவரின் முகனூல் பக்கத்தில் •இளைஞர்கள் போராட துடிக்கிறார்கள் ஆனால் தலைவர்கள்தான் தயங்குகிறார்கள். எனும் தலைப்பில்திலிபன் மகேந்திரன் தேசிய கொடியை எரித்த போது எடுக்கப்பட்ட புகைப் படத்தை பதிவிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது :-
 
இளைஞர்கள் போராட துடிக்கிறார்கள் ஆனால் தலைவர்கள்தான் தயங்குகிறார்கள்.
 
இன்று முத்துக்குமாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் ஒரு இளைஞர் இந்திய தேசியக் கொடியை எரித்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
 
தேசியக் கொடியை எரிப்பது தேவைதானா? என்று சிலர் கேட்பார்கள்
 
தேசியகொடியை எரிப்பது பெரிய வீரமா? என்று இன்னும் சிலர் கேட்பார்கள் தேசிய கொடியை எரித்தவன் தமிழனா இல்லையா என வேறு சிலர் ஆராய்வார்கள்.
 
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. பற்றி எரியப் போகும் காட்டுத் தீக்கான முதல் நெருப்பு இது.
நேற்று ஒரு இளைஞன் நாராயணுக்கு செருப்பால் அடித்தான்.
 
இன்று ஒரு இளைஞன் தேசிய கொடியை எரித்துள்ளான்.
 
இந்த இளைஞன் கைது செய்யப்படலாம்.
 
தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்படலாம்.
 
ஆனால் என்ன செய்தாலும் இனி இந்த நெருப்பை இந்திய அரசால் அணைக்க முடியாது
 
.
குமுறி வெடிக்கும் தமிழக இளைஞர்களின் உணர்வை அடக்க முடியாது.
 
இந்த சம்பவத்தை அறிந்தபோது ஆரம்ப காலங்களில் நாங்கள் இலங்கை தேசியகொடியை எரித்தது நினைவுக்கு வருகிறது.
 
பருத்திதுறை நீதிமன்றத்தில் பறந்த தேசியைக்கொடியை அறுத்து எறிந்தமைக்காக பொலிசாரிடம் அடிவாங்கியது நினைவுக்கு வருகிறது.
 
ஆரம்பத்தில் நாம் கொடியை எரித்து எப்படி இலங்கை அரசுக்கு எதிரான போராட்டமாக வளர்ந்தோமோ அதேபோன்று இந்திய அரசுக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டத்திற்கு இந்த எரிப்புகள் நிச்சயம் வழிகோலும். என்று கூறியுள்ளார்.
 
பாலன் தோழர் ( Balan tholar ) என்பவரின் அந்த பதிவில் பெரும்பலானோர் திலிபன் மகேந்திரன் இந்திய தேசிய கொடியை எரித்தமைக்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறான அவரது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
 
அதில் காணப்படும் ஒரு சிலரின் முகனூல் பக்கத்தின் பெயர் மற்றும் அவரது கருத்து பதிவில் கூறியுள்ளதாவது :-
 
கோவையூரான் பாபு :
 
இந்த தேசியக்கொடி எரிப்பு குற்றம் குற்றமே. இந்த கொடிக்காக எத்தனை பேர் தங்கள் உயிரைதியாகம் செய்துள்ளனர் அன்றைய நாட்களில்.
 
Raja Prafa :
 
நீங்கள் கூறுவது தவறு.
 
Curry Leaves :
 
இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுத்துஈழத்தமிழ் இனத்தை அழித்தது சரியா?
 
கோவையூரான் பாபு :
 
இந்திரா காந்தி அம்மையாரும், mgr, இருவரும் போனதோடு எமக்கிருந்க ஆதரவு முடிந்தது. அது வேறு, அது மனதில் நீங்காத வடு. இலங்கையை தவிர்ந்த எந்த கொடியும் ஈழத்தமிழருக்காக எரிப்பதோ, கொச்சைப்படுத்துவதோ, மிகவும் தவறு.
 
கோவையூரான் பாபு :
 
இறுதியில் எவ்வளவோ அழிவுகள் நடந்தும் தலைவர் சிங்கள மக்கள்மீதோ, இந்தியாவுக்கு எதிராகவோ எந்த விதமான பழியுணர்ச்சியையும் மேற்கொள்ளவில்லை. ஒரு தேசியக்கொடி உருவாக்க எத்தனை உயிர்கள் விலையாக கொடுக்கப்பட்டது என்று தலைவருக்கு மட்டும் தான் தெரியும்.
 
இந்தியா எனக்கு என்பதை விட தலைவருக்கு எவ்வளவோ கெடுதல் செய்தும் இறுதிவரை இந்தியாவை தூற்ரவும் இல்லை இந்தியாவை அவமதிக்கவும் இல்லை. உதாரணத்துக்கு மாவீரர் நாள் உரைகளை எல்லோரும் பார்க்கவும்.
 
Balan tholar கோவையூரான் பாபு :
 
புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியா குறித்து எதுவும் கூறவில்லை என்பதால் அவர் தமிழகத்தில் ஆயதப் போராட்டத்தை விரும்பவில்லை என்று எப்படி உங்களால் அர்த்தப்படுத்த முடிகிறது?
 
உங்கள் தலைவர் பிரபாகரன் இனி புலம்பெயர்ந்த நாடுகளில் போராட்டம் தொடரும் என அறிவித்தார். அப்படியென்றால் நீங்கள் ஏன் லண்டனில் போராடவில்லை?
 
கோவையூரான் பாபு :
 
போராட்டம் புலம்பெயர்நோரிடம் ஒப்படைப்பது என்பது ஆயுதப்போராட்டம் ஆல்ல பாலன் தோழரே. தலைவருக்கு தெரியாதா லண்டனில் ஆயுதப்போராட்டம் சாத்தியம் இல்லை என்பது. அதேபோல தமிழகத்தில் ஆயுதப்போராட்டத்துக்கு என்ன தேவையிருக்கு. இந்தியா இன்றி ஈழத்தில் தீர்வு காண முடியாது. அது தெரிந்தும் சும்மா வீம்புக்கு கதைக்கமுடியாது. அதேநேரத்தில் ஈழத்தமிழருக்கு தீர்வு கிடைக்க இந்தியா விடப்போவதும் இல்லை. இந்தியா என்பது மத்திய அரசு.
 
சுபாஷ் தனவேல் :
 
கோவையூரான் பாபு போராட்டம் தமிழகத்தின் கையிலேயே ஒப்படைக்கப் பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தமிழத்களால் ஆயுதம் எடுத்தோ தீவிர போராட்டமாகவோ போராட முடியாது தான் ஆனால் ஈழமோ தபிழகமோ புலம் பெயர்ந்த தமிழ்ர்கள் இல்லை. ஈழம் தமிழகம் பூர்வ குடிகள். போராட வேண்டியது தமிழகம் தான்…
 
ஹிந்தி திணிப்பு, தமிழின பண்பாடு மறுப்பு, மத்திய கட்சி அடிமைகளே நேரடியாக தமிழகம் ஆள துடிக்கும் முயற்ச்சி இது எதில் தமிழின மதிப்போ ஈழ உதவியோ தெரிகிறது
 
சுபாஷ் தனவேல் :
 
அமைதிப்படை என்று தமிழ் இராணுவத்தை கொன்ற போதே அனைத்தும் முடிந்த்து. தமிழ்தேச தலைவரை தமிழ் இராணுவத்தை தீவிரவாதிகள் எனும் ஹிந்தியாவில் தமிழினத்திற்கு போராடும் அனைவரும் தீவிரவாதிகளே.. ஈழம் என்ற பெயரை சொன்னாலே தீவிரவாதிகள் தான்
 
பள்ளிக்கூடத்தில் மிட்டாய்க்கு தேசிய கொடி குத்தி சல்யூட் அடித்து, கிரிக்கெட் வெற்றியில் இந்தியா இந்தியா என்று கத்தி நாட்டு பற்று வளர்த்தது போதும்.
 
இந்திய சுதந்திரம் கிடைத்தபோதே தமிழகத்தற்கு சுதந்திரம் கிடைத்ததா.
தேசிய கொடி தேசம் நாட்டைஎல்லாம் சுதந்திர தியாகிகளுடன் இறந்தது இன்று இந்திய அரசு ஒரு கேடுகெட்ட ஹிந்தி பெரும்பான்மையை வடக்கு மையப்படுத்திய அரசியல்.
 
ஐநாவும் கைவிட்டது உலகநாடுகளும் கைவிட்டது . இலங்கைக்கு அடுத்து இரண்டாம் குற்றவாளி இந்தியாதான். சரி இனி என்ன செய்வது நாம் எப்படி ஈழம் அடைவது
 
Sham Shiyam Balan tholar :
 
நமது போரட்டத்தையோ.மேதகு அண்ணனையோ விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள் நிங்கள்.
 
Yoga Valavan Thiya :
 
நீங்கள் இந்தியாவை புரிந்து கொண்டது அவ்வளவுதான் பாலன் தோழர் பிரச்சனைகள் இருக்கின்றன சரியான முறையில் அணுகினால் அவை தீர்க்கப்பட வழியிருக்கின்றது தீர்க்கப்படும் நீங்கள் நினைப்பது ஒருபோதும் நிறைவேறாது ஏனெனில் இந்திய தேசியம் வலுப்பெற்றுவிட்டது அதனை உடைப்பது அவ்வளவு சுலபமல்ல. வடகிழக்கு மானிலங்களில் மட்டும் இந்தி தேசியம் வலுப்பெறவில்லை காலப்போக்கில் அதுவும் வலுப்பெறும்
 
Balan tholar :
 
இந்தியாவை விட வலுவாக இருந்த சோவியத் ஒன்றியம் துண்டு துண்டாக உடைய வில்லையா?
 
இன்று இந்தியாவில் போராட்டம் நடக்காத அமைதியான மாநிலம் ஒன்றை உங்களால் காட்ட முடியுமா?
 
இந்தியாவுக்குள் 176 மாவட்டங்களில் நக்சலைட் ஆட்சி நடைபெறுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியதை மறந்துவிட்டீர்களா?
 
Yoga Valavan Thiya :
 
சோவியத் யூனியனில் இந்தியா போல ஜனநாயகம் இருக்கவில்லை அத்தோடு அது நாடுகளின் ஒன்றியமாகத்தான் இருந்தது. அத்துடன் இந்தியா போல. ஒரே கலாச்சார ஒருமைப்பாடு அனைத்து ஒன்றியங்களுக்கில் இருக்கவில்லை
இந்தியாவில் தற்போது முதளாளித்துவம் திரட்சி பெற்று விட்டது அதனால் தேசியம் வலுப்பெற்று விட்டது. நக்சலைட்டுகள் ஒட்டு மொத்த இந்தியாவையும் ஆட்சி செய்யகூடிய நிலை வரலாம் ( வெகு அரிது) ஆனால் இந்தியா உடையாது.
 
Kantharuban Tharmakulasingam Yoga Valavan Thiya :
 
இந்தியாவில் ஜனநாயகமா………?
 
Arumugam Jaganathan :
 
இவர் ஜனநாயகம் என எதைக் குறிப்பிடுகிறார்? இந்தியாவில் அப்படி ஒன்று இருக்கிறதா??????????
 
கோவையூரான் பாபு :
 
நாங்கள் இலங்கை தேசியகொடியை எரித்து, ஆயுதப்போராட்டம் பிறந்தது காலத்தின் கட்டாயம். எமது உரிமைகள் மறுக்கப்பட்டதால், அடக்கப்பட்டதால் பிறந்ததே ஆயுதப் போராட்டம். ஆனால் தமிழகத்தில் ஆயுதப்போராட்டத்துக்கு என்ன தேவையிருக்கு..
 
Balan tholar :
 
தேசிய சிறுபான்மை இனங்களின் சிறைக்கூடமே இந்தியா என்றார் தோழர் தமிழரசன். ஆனால் நீங்களோ தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்திற்கு என்ன தேவை இருக்கு என்று கேட்கிறீர்கள்?
 
ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் என்று தோழர் தமிழரசன் கூறினார். ஆனால் நீங்களோ தமிழக மக்கள் ஆயதப் போராட்டம் நடத்த தேவையில்லை என்கிறீர்கள்.
 
அப்படியென்றால் ஈழத் தமிழர்கள் விடுதலை பெற வேண்டும். ஆனால் தமிழக மக்கள் தொடர்ந்தும் அடிமையாக இருக்க வேண்டும் என்கிறீர்களா?
 
தமிழக விடுதலையே ஈழ விடுதலைக்கு வழிவகுக்கும் என்றார் தோழர் தமிழரசன். ஆனால் நீங்களோ தமிழக விடுதலை தேவையில்லை. ஈழ விடுதலை போதும் என்கிறீர்களா?
 
Suresh Shanmugam :
 
கண்டிக்கதக்கது…. தாய் நாட்டை அவமதிக்கும் செயல்…
 
Balan tholar :
 
நீங்கள் சொல்லும் தாய்நாட்டின் அரசு உங்களை தன் குடிமகனாக நினைக்கவில்லையே!
 
பாண்டி துரை :
 
சிலர் இதை தேச துரோகம், குற்றம், தவறான செயல் என்று விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது. உள்ளபடியே இந்திய அரசு தமிழ் மொழி, தமிழ் இனத்தின் உரிமைகளை, உணர்வுகளை அற்பபமாய் புழு பூச்சிபோல இந்தியா தொடர்ந்து புறக்கணித்து வருகிறது அந்த கோபத்தின் வெளிபாடே இது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சகட்டுமேனிக்கு கிந்தி திணிக்கப்பட்டு வருகின்றன இதை எல்லாம் இந்த சிலர், நடுநிலை நக்கிகள், கிந்திய சொம்புகள் கேள்வி கேட்க்க மாட்டார்கள்?
 
Arumugam Jaganathan :
 
அடிமையாய் காலில் விழுந்து வாழ்வதை காட்டிலும் எழுந்து நின்று சாவது மேலானது…
 
2லட்ச உறவுகளை இழந்து நிற்கிறோம் ஆதரவற்று..
 
எமக்கான அரசியலை எம்மை தொடரவிடுங்கள்
 
அதிகாரம் கொல்லும் அவ்வளவே ஆனால் போராளிகள் என்றும் வெடித்துகொண்டேதான் இருப்பார்கள்…
 
கோழைகள் விலகி நில்லுங்கள்,
 
துரோகிகள் ஓடி ஒளியுங்கள்,
 
எதிரிகள் எங்கள் முன் வரட்டும்…
 
மீள்வோமா வீழ்வோமா பின் தெரியும்.நாம் தமிழர்.
 
செல்வராசு தமிழன் :
 
அம் அண்ணா தமிழகத்தின் தன் மானத் தமிழர்களின் இன. விடுதலை பெரு நெருப்பை இந்திய. அரச பயங்கரவாத. நாய்களாள் ஒன்றும் செய்ய. இயலாது அது போல் இந்தியா என்பது தமிழர்களின் அடிமை சிறைச்சாலை என்பதை இன. விடுதலையை விரும்பும் தமிழருக்கு நன்கு தெரியும்
 
Selveeswaran Selliah :
 
En tamil sagotharigalai rape pannum pothu engalal kappaatra mudiyaatha india desam vendam. Tamil desam malarattum. I lost my nationality confidence.
 
Thiru Jegatheesan :
 
முதலில் தேவை ஒற்றுமை. ஈழவிடுதலை போராட்டம் மௌனிக்க வைத்தது ஒற்றுமைஇன்மையும்
காட்டிக்கொடுப்புமே.சாதிவெறி,மக்களை முட்டாள் ஆக்கும் அரசியலை இல்லாது தமிழகம் மலரவழி செய்கை அனைவரின் கடமை
 
Titus Raj :
 
Our mayirum pudunga mudiyaathu. You must live in a military nation. Now u are enjoying freedom beyond limitations. Mind it
 
Siva Sundara :
 
Where is freedom in India. If you are millionaire, multi millionaire, thugs, rowdys, murderer, corrupt etc you have freedom. If you want to live honestly like farmers, low wage workers and ordinary simple people there is no freedom at all these people. There is also no justice in India. Rich people have one kind of justice poor people have different degree of justice. There is also no unity in India.
 
சி.இளஞ் சென்னியன் :
 
பல முறை அந்த கொடியை எரித்த தோழர்கள் இருக்கிறார்கள். அமைப்பு நோக்கமோ அரசியல் நோக்கமோ இல்லாத இது போன்ற நண்பர்கள் செயல் எந்த விளைவையும் ஏற்படுத்த போவதில்லை.அவர்க்கு நமது பாராட்டூகள்.
 
Theivendraraja Pon :
 
முத்துக்குமார் இட்டதீ தனக்கல்ல தமிழினத்தின் விடுதலை நின்மதி சுதந்திரம் வேண்டி மாவீர்ரானவர்களே ஆண்டுவீரவணக்கம்
 
MD Manav :
 
Oru pothum ithupol seyyum the ..maganai uyirodu vidakkudathu .
 
கமலா பாலன் :
 
அவர்களுக்கு இந்தியக் கொடி எரிந்த போது அது பாகிஸ்தானியக் கொடியாத்தான் தெரிகிறதாம்!
 
Siddhik Snm :
 
உண்மை .இல்லை என்று சொல்லவில்லை .அதற்க்கு இது மட்டுமே தீர்வு ஆகாது
 
மயில்சாமி பழனி குமார் :
 
இது முத்துக்குமார் இட்ட தீ!
 
Theivendraraja Pon :
 
கேட்பது எமது சுதந்திரம் உரிமை நடமுறைப்படுத்த வேண்டியது நாட்டின் கடமை
 
Ravi Ravi :
 
எது தேச துரோகம்.
 
முத்தையன் :
 
ஒரு இணமே அழிப்பதற்க்கு துணையாய் இருந்தது இந்ந இந்நிய அரசு அது தவறில்லை ஆனால் தேசியகொடியை எரித்தால் அது குற்றம் நல்லா இருக்கு உங்க நியாயம்
 
Kanna Sivaganeshan :
 
இது தனிமனித விளம்பரமே தவிர உணர்வுபூர்வமானதல்ல.சாதிகளாயும் கட்சிகளாயும் பிரிந்து கிடக்கும் தமிழக மக்கள் உருப்படியாக ஏதும் செய்துவிடபோவதில்லை.
 
Sathish Tamilan :
 
எது தேச துரோகம்…….. அமைதி படை என்ற பெயரில் என் இன மக்களை 2,00,000 பேரை அழிப்பதற்கு… உடந்தையாக இருந்த———- உங்களுக்கு தேச துரோகிய தெரியவில்லை…. என்று பதிவிட்டுள்ளனர்.
 
இந்திய தேசிய கொடியை எரித்த திலிபன் மகேந்திரன் என்ற இளைஞர் மீது கண்டிப்பாக சட்ட ரீதியான நடவடிக்கையை தமிழக காவல்துறை எடுக்க வேண்டியது அவசியமானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories