பொன்.ராதாகிருஷ்ணன் பொங்கல் வாழ்த்து!

Published:

04 May15 pon radha e1527909662278 - 2026

மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள பொங்கல் வாழ்த்து !

அன்பு சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக நமது நாடு ஒரு உன்னதமான ஆட்சியை கண்டு, உலக அரங்கில் நம்முடைய நாட்டினுடைய பெருமையை நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உயர்த்திக் காட்டி இருக்கின்றார்கள். அதனுடைய விளைவு, இன்று இந்த பொங்கல் விழாவை உலக நாடுகளிலே தலைசிறந்த நாடுகள் கொண்டாட ஆரம்பித்திருக்கின்றன. சென்ற ஆண்டு, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் பொங்கல் விழாவை கொண்டாடியிருக்கின்றார்கள். இந்த ஆண்டு முதல் பொங்கல் வாழ்த்தை தெரிவித்த பெருமைக்குரியவராக கனடா நாட்டினுடைய அதிபர் விளங்குகிறார்.

இந்த அளவுக்கு நம்முடைய நாட்டினுடைய தன்மைகள், விழாக்கள் இவைகள் எல்லாம் உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு நம்முடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய ஆளுமை சக்தியால் நிகழ்த்தி காட்டியிருக்கின்றார்கள்.
கடந்த நான்கரை ஆண்டுகளிலே நம்முடைய நாடு எல்லாத் துறைகளிலும் மகோன்னதமான ஒரு முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது.

இந்த பொங்கல் விழா மேலும் சிறப்பு சேர்ந்ததாக நமக்கு அமைந்திருக்கின்றது. காரணம், இந்த நாளில் நாம் கொண்டாடுகின்ற இந்த பொங்கல் விழாவிலே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உலகம் நம்முடைய தலைமையை, இந்திய திருநாட்டினுடைய தலைமையை ஏற்று நடக்கும் உயர்ந்த நோக்கை நோக்கி நாம் வெற்றி கண்டாக வேண்டும். அதற்கு மீண்டும் நம்முடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையின் ஆட்சி தொடர்ந்தாக வேண்டும்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

அதற்காக நாம் அத்தனை பேரும் அறுவடை திருவிழாவான இந்த பொங்கல் நாளிலே, இறைவனுக்கும், உழைத்தோருக்கும், உழைப்புக்கு பக்கபலமாக இருந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்றியை செலுத்தி, நம்முடைய நாடு மேலும் பல வெற்றிகளை அடைய கூடிய வகையில் இறைவன் நமக்கு அருள வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் கூட இந்த பொங்கல் விழாவை கொண்டாடுவோம்.

பெரியவர்களுக்கு என்னுடைய வணக்கங்களை செலுத்தி, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தில் இருக்கின்ற அனைவருக்கும் என்னுடைய இனிய பொங்கல் விழா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

  • பொன். இராதாகிருஷ்ணன்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img