December 5, 2025, 9:40 PM
26.6 C
Chennai

தமிழகத்தில் 2018ல் 12,216 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு! 2017ஐ விட 24% குறைவு!

accident capita - 2025

தமிழகத்தில் 2018ல் 12,216 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்றும் இது, 2017ஐ விட 24% குறைவு என்றும் போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வண்ணம் இருந்தன குறிப்பாக, சரக்கு வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச் செல்வது, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத்து மற்றும் தரமற்ற சாலைகள் ஆகியவற்றினால் பெரும்பாலான விபத்துக்கள் நேரிடுகிறது.

அதேபோல் மதுபோதையில் வாகனம் ஓட்டும் காரணத்தினாலும் அதிக விபத்துகள் அரங்கேறி வருகிறது கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 15 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்து வருகின்றனர்

எனவே சாலை விபத்துக்களை தடுக்க மத்திய போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன்படி அனைத்து மாநிலங்களிலும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கும்படி பொதுமக்களிடம் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது

அதன் அடிப்படையில் அந்தந்த மாநில போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் இணைந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் அதேபோல் விபத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையும் கடுமையாக உயர்த்தப்பட்டது

இது போன்ற காரணங்களால் சாலை விபத்துக்கள் தமிழகத்தில் கடந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது அதன்படி கடந்த 2017ஆம் ஆண்டை விட 2018 ஆம் ஆண்டில் தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 24 சதவீதம் குறைந்துள்ளது இதுகுறித்து தமிழக போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 65 ஆயிரத்து 562 சாலை விபத்துகள் நடந்துள்ளன

இதில் அதிகபட்சம் சென்னை நகரத்தில் 7259 விபத்துகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1176 விபத்துக்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் 1237 திருநெல்வேலி மாவட்டத்தில் 2260 விபத்துக்களும் திருவாரூர் மாவட்டத்தில் 908 விபத்துகளும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 995 விபத்துகளும், கரூர் மாவட்டத்தில் 1097 விபத்துகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1216 விபத்துகளும் நடைபெற்றுள்ளன

அதே சமயம், கடந்த 2018ம் ஆண்டில் ஜனவரி-டிசம்பர் வரை சாலை விபத்துகள் குறைந்துள்ளது

அதன்படி அந்த ஆண்டில் 63 ஆயிரத்து 920 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன இது 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2.50 சதவீதம் குறைவாகும் 2017ம் ஆண்டில் அதிகபட்சம் சென்னை நகரத்தில் 7586 விபத்துக்களும் திருநெல்வேலியில் 2442 சாலை விபத்துக்களும் நடந்துள்ளன.

அதேபோல் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டை விட 2018ல் 24.39 சதவீதம் குறைந்துள்ளது

2017 ஆம் ஆண்டில் மொத்தம் 16,157 பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் 2018ல் சாலை விபத்தால் 12,216 பேர் தான் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் எங்களது இலக்கில் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். விரைவில் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்

வேலூர் மாவட்டத்தில் மட்டும் 2018ல் 503 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். 2017 ல் 644 2017 ஆண்டை விட 27.89 சதவீதம் உயிரழப்பு குறைவு என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories