தெற்காசிய போட்டி: 31 தங்க பதக்கங்களை வென்று இந்தியா முன்னிலை

சற்றுமுன்

16-ஆவது தெற்காசிய போட்டிகளில் இந்தியா 31 தங்கம் உள்பட 46 பதக்கங்களைப் பெற்று தொடந்து முன்னிலையில் உள்ளது.

இந்தியாவிற்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 16 தங்கம் கிடைத்தது. மேலும் 7 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றனர். இதனால், ஒட்டு மொத்தமாக நேற்று மட்டும் 26 பதக்கங்களை பெற்றது.

இதன் மூலம் பதக்கங்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது. மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் இன்றைய போட்டிகளில், பளுதூக்குதல் போட்டியில் 75 கிலோ பிரிவில் இந்தியாவின் கவிதா தேவி, தங்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.