வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு: தமிழகம் முழுவதும் 23, 24ம் தேதி சிறப்பு முகாம்

சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

satyabrata sahoo - 2026

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்காக, தமிழகம் முழுவதும் 23, 24ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கடைசி வாய்ப்பாக இருக்கும் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 23 மற்றும் 24 ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப் பட்டது. அதன்படி தமிழகத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 பேர். பெண்கள் 2 கோடியே 98 ஆயிரத்து 60 ஆயிரத்து 765 பேர். இதர பிரிவினர் 5472 பேர் அடங்குவர்.

மேலும் வாக்காளர் பட்டியலில் வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 97 பேர் சேர்க்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் 23 மற்றும் 24 ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.