காஷ்மீர் தாக்குதலுக்கு ரஜினி, கமல் கண்டனம்

சற்றுமுன் சென்னை தமிழகம்

kashmir blast - 2026

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வியாழக்கிழமை நேற்று மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப் படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது பாகிஸ்தானின்
ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் வெடிக்கச் செய்தார்.

இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட சிஆர்பிஎப் வீரர்கள்
தங்கள் உயிரை இழந்துள்ளனர். படுகாயமடைந்த 38 சிஆர்பிஎப் வீரர்கள், பாதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தக்குதல் சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது கண்டன அறிக்கையில், காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது ! நாட்டின் குடிமகன்கள் அனைவரும் வீரர்களுடன் தோளோடு தோள் நிற்போம் என்று கூறியிருக்கிறார்.

அதேபோல், மக்கள் நீதிமய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன், ஜம்மு-காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் கண்டனத்திற்குரியது  என்று தெரிவித்ததுடன், தாக்குதல் பற்றி ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.