நாடக அரசியல் நடத்தும் திமுக தமிழிசை சாடல்..!
திமுக என்றாலே நாடக அரசியல்தான் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சாடினார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவா் தமிழிசைசௌந்திரராஜன் பத்திரிக்கைாளருக்கு அனித்த பேட்டியில் அவர் கூறியதாவது்
அகில இந்திய அரசியலிலும் மு.க.ஸ்டாலின் நாடகமாடத் தொடங்கிவிட்டார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். ஸ்டாலினிடம் தேதியே கேட்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். எல்லோரையும் சந்திரசேகர ராவ் போய் பார்க்கிறாரே, நம்மைப் பார்க்கவில்லையே என்று ஆதங்கத்தில் சந்திக்க மறுத்ததுபோல் ஸ்டாலின் காட்டிக் கொள்கிறார்.
திமுக பொருளாளா் துரைமுருகன்கூட மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆவார் என்று கூறமுடியவில்லை. குடியரசுத் தலைவர் ஆவார் என்றுதான் கூறியுள்ளார். அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் திமுக தலைவா் முக.ஸ்டாலினை குடியரசுத் தலைவர் ஆவார் என்றுதான் கூறுகிறார். அதற்காக, குடியரசுத் தலைவர் பதவியை நான் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று அர்த்தம் இல்லை.
தமிழரான மூப்பனாருக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்தது. அதைத் தடுத்தது திமுகதான். குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் மீண்டும் வருவதைத் தடுத்ததும் திமுகதான். தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று சொல்ல திமுகவுக்கு எந்த உரிமையும், தகுதியும் இல்லை. போபர்ஸ் பீரங்கி ஊழல் செய்தவர்களுக்கா உங்கள் வாக்கு என கேட்ட கட்சிதான் திமுக. பழைய விவகாரங்களைத் தோண்டினால் ஸ்டாலின் திண்ணைப் பிரசாரத்துக்குக்கூட போக முடியாது. திமுக என்றாலே நாடக அரசியல்தான்.
மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வரும். அதற்கான நல்ல சூழ்நிலை நிலவி வருகிறது. தூத்துக்குடியில் நான் நோட்டாவைத் தாண்ட மாட்டேன் என்று கூறுகின்றனர். அப்படிக் கூறுபவர்கள் மக்களையே சந்திக்காதவர்கள். மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள். தூத்துக்குடியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார்.


