December 6, 2025, 8:14 AM
23.8 C
Chennai

இந்தியாவில் ஓடும் ஒரே ஒரு தனியார் ரயில்வே பற்றி தெரியுமா? உங்களுக்கு…..!

T.T.SAGUNTHALA - 2025இந்தியாவின் ரயில்வே துறை போக்குவரத்து மத்திய அரசின் கையில் இருக்கும் போது, சகுந்தலா ரயில்வே போக்குவரத்து பயன்பாடு மட்டும் தனியார் வசம் உள்ளது. இதற்கான காரணமும் புரியாத புதிராகவே உள்ளது.

இந்தியாவில் இயங்கும் ஒரே தனியார் ரயில்இதுதான்
ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற போது 40-க்கும் மேற்பட்ட ரயில்வேக்கள் இருந்தன.

அவை அனைத்தும் தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. 1951ம் ஆண்டில் இந்திய அரசு அனைத்து ரயில்வேக்களையும் தேசிய உடமையாக மாற்றியது.

அப்போது இந்த ரயில்வே மட்டும் தேசிய உடமைக்கு கீழ் கொண்டுவரப்படாமல் விடுபட்டு விட்டது. அதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை. எனினும், இந்த இந்த ரயில்வேக்கு இந்திய ரயில்வே துறை ராயலட்டியும் வழங்கி வருகிறது.

அந்த ரயில்வேயின் பெயர் தான் ”சகுந்தலா ரயில்வே”. 1910ம் ஆண்டில் பிரிட்டன் நிறுவனம் இந்தியாவில் ரயில்வே சேவையை தொடங்கியது.

அந்த ரயில்வே தான் தற்போது ‘சகுந்தலா ரயில்வே’ என்று பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பாவில் விளையும் பருத்தியை, மும்பை வழியாக இங்கிலாந்தின் மான்செஸ்டருக்கு கொண்டு செல்வதின் பயன்பாட்டுக்காக இந்த ரயில்வே போக்குவரத்து கொண்டு வரப்பட்டது.

ஆனால் இப்போது விதர்பாவில் பருத்தி உற்பத்தி பெரியளவில் கிடையாது. மாறாக இந்த ரயில் தற்போது பயணிகள் போக்குவரத்துக்காக இயக்கப்பட்டு வருகிறது.

மும்பை-நாக்பூர்-ஹவுரா வழித்தடத்தில் முர்சாஃபூர் என்ற ரயில்நிலையம் உள்ளது. அங்கியிருந்து 73 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அச்சல்பூர் என்ற இடம் முதல், முர்சாஃபூரின் தென்கிழக்கு பகுதியில் இருந்து 113 கி.மீ தொலைவில் அமைந்துள்ள யவட்டாமல் என்ற இடம் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது.

இந்தியாவின் பெரும்பாலான பாதைகள், அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டுவிட்டன.

இன்னும் சில மலை ரயில் வழித்திடம் மட்டுமே குறுகிய பாதைகளாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ரயில் இந்த ரயில் 2 அடி 6 அங்குலம் கொண்ட குறுகிய வழிப்பாதையில் தான் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடம் மட்டும் தான் சகுந்தலா ரயில்வே நிறுவனத்திற்கு சொந்தமானது.

அதில் இயக்கப்படும் ரயில், இந்திய ரயில்வே துறைக்கு சொந்தமானது.

இது விரைவு ரயில் என்று சொல்லப்பட்டாலும், சகுந்தலா எக்ஸ்பிரஸ் ஒரு பயணிகள் ரயில் தான். மத்திய மண்டல ரயில்வேயின் 55 சதவீத வருமானம் இதற்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்த குறுகிய ரயில் பாதை மூலம் ரூ. 5 கோடி ஆண்டு வருமானம் ரயில்வே துறைக்கு கிடைத்து வருகிறது.

இதை அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என்றால் இந்திய மதிப்பில் ரூ. 1500 கோடி வரை தேவைப்படும்.

ஆனால் இதற்கு இந்திய ரயில்வே தயாராக இல்லாத காரணத்தினால் குறுகிய ரயில் பாதையாக இருந்து வருகிறது.

சகுந்தலா எக்ஸ்பிரஸில் பயணிப்பது வித்தியாசமான அனுபவத்தை தரும். மணிக்கு 20 கி.மீ வேகத்தில் மிகவும் மெதுவாக செல்லும் இந்த ரயில். இதனுடைய மொத்தமான 189 கி.மீ கடப்பதற்கு 20 மணிநேரத்தை சகுந்தலா ரயில்வே எடுத்துக் கொள்கிறது.

ஆனால் அதே தொலைவில் உள்ள பயணிக்கும் பேருந்துகள் 189 கி.மீ கடப்பதற்கு 4 மணிநேரமாக எடுத்துக் கொள்கின்றன.

இருந்தாலும் இந்த ரயிலில் பயணிப்பதற்கு கூட்டம் அலைமோதுகிறது. பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் 6 மடங்கு குறைவு என்பதே இதற்கு காரணம்.

அதுமட்டுமில்லாமல் இப்பகுதியில் வசிக்கும் மக்களின் உணர்வுடன் கலந்துவிட்டதாகவே இந்த ரயில் திகழ்கிறது.

பார்ப்பதற்கு பொம்மை ரயில் போல இருக்கும் சகுந்தலா ரயில்வேயில் செல்வதை இப்பகுதி மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

பிரிட்டன் காலத்தில் இந்த ரயில் எப்படி இயங்கியதோ, அதுபோன்று தான் தற்போது சகுந்தலா ரயில்வே செயல்படுகிறது.

இந்த ரயிலுக்கு பயணியாளர்கள் யாரும் கிடையாது. ரயிலை இயக்கும் கார்டே, பயணிகளுக்கு டிக்கெட் வழங்குகிறார்.

ரயில்நிலையங்கள் இல்லாத ஊர்களில் மக்கள் கையை காட்டினால், இந்த ரயில் நின்று அவர்களை ஏற்றி செல்கிறது.

இந்திய ரயில்வே துறையின் வித்தியாசமான பயண அனுபவத்தை பெற விரும்புபவர்கள், சகுந்தலா எக்ஸ்பிரஸில் சென்று திரும்பலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories