அஜித்தின் ஆசை படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார் பூஜாபட்ரா பாலிவுட் நடிகையான இவர் நடிகர் நவாப் ஷாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பாலிவுட் நடிகை பூஜா பட்ராவும், நடிகர் நவாப் ஷாவும் காதலித்து வந்தனர். தற்பொழுது இவர்கள் சத்தமில்லாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். பூஜாவும், நவாப் ஷாவும் காதலிப்பது அவர்களின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் கடந்த மாதம் தான் தெரிய வந்தது.
பூஜா பட்ராவும், நவாப் ஷாவும் விரைவில் திருமணத்தை பதிவு செய்யப் போகிறார்களாம். திருமணமானதை இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார் நவாப் ஷா. இவர்களின் இந்த காதல் கதையை வைத்து ஒரு படமே எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார் நவாப் ஷா.



