மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சற்றுமுன் தமிழகம் நெல்லை மதுரை லைஃப் ஸ்டைல்

Rain forecast Chennai1 - 2026

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இது குறித்துக் கூறிய போது,

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், அடுத்த 2 நாளுக்கு மிதமானது முதல் கனத்த மழை வரை பெய்யக்கூடும்.

தேனி, வேலூர், நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் கிழக்குக் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தேவாலாவில் 3 செ.மீ., பள்ளிப்பட்டு, பெரியகுளம், கமுதியில் தலா 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.