December 6, 2025, 5:36 AM
24.9 C
Chennai

‘லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்யாணி ஆஸ்பத்திரி”(உருவான கதை-மயிலை)

20fr_mahaperiyava10_634796g

‘லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி
மற்றும் கல்யாணி ஆஸ்பத்திரி”(உருவான கதை-மயிலை)
 
(“உங்களுக்கு என்று குழந்தைகள் இல்லாவிட்டால் என்ன? பல ஏழை மக்களுக்கு அப்பா,அம்மாவாக இருங்கள்.நீ, நியாயமாக வக்கீல் தொழில் செய்து, வரும் வருமானத்தைக்கொண்டு கல்விச்சாலை அமைத்து, ஞானதானம் செய். உன் பெயர் நிலைத்து நிற்கும். அதேபோல், பிரஸவ ஆஸ்பத்திரி அமைத்து உன் பத்தினியின் பெயரையும் நிலை நிறுத்து” என்றார்கள்,மகாஸ்வாமிகள்)
 
(பெரியவாளின் வாக்கு, வேதவாக்கு.!)
 
சொன்னவர்; வி.ஸ்ரீநிவாஸன், சென்னை.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
 
சென்னையில் மிகுந்த செல்வச் செழிப்புடன்
விளங்கிய வழக்கறிஞர் ஸர். பி.எஸ்.சிவஸ்வாமி அய்யர்.
மனைவியின் பெயர், கல்யாணி.
வீட்டின் பெயர் ‘சுதாமா’. அந்தக்காலத்தில்
மிகப் பெரிய வீடு அது.
 
பட்டணத்தில் முகாமிட்டிருந்த காலத்தில்,ஒரு நாள்,
மகாஸ்வாமிகள், முன்னறிவிப்பின்றி, சுதாமாவுக்கு
விஜயம் செய்து சிவஸ்வாமி தம்பதிகளை ஆனந்தக்
கடலில் மூழ்கச் செய்துவிட்டார்.
 
தம்பதியருக்கு சந்தான பாக்கியம் இல்லை.
 
“உங்களுக்கு என்று குழந்தைகள் இல்லாவிட்டால் என்ன?
பல ஏழை மக்களுக்கு அப்பா,அம்மாவாக இருங்கள்.
நீ, நியாயமாக வக்கீல் தொழில் செய்து, வரும் வருமானத்தைக்கொண்டு கல்விச்சாலை அமைத்து, ஞானதானம் செய். உன் பெயர் நிலைத்து நிற்கும்.
அதேபோல், பிரஸவ ஆஸ்பத்திரி அமைத்து உன் பத்தினியின்பெயரையும் நிலை நிறுத்து” என்றார்கள்,மகாஸ்வாமிகள்.
 
அந்த உத்தரவை, அவ்வாறே, நிறைவேற்றிக்காட்டினார்,
ஸ்ரீசிவஸ்வாமி அய்யர். அரண்மனை போன்ற சுதாமாவை
விற்று, சலிவன்கார்டன்ஸ் சாலையில் ஒரு வீட்டை
வாங்கி வசிக்கத் தொடங்கினார்.
 
எட்வர்டு எலியட்ஸ் சாலையில் (தற்போதைய
பிரசிடெண்ட் ஹோட்டல் அருகே) ;கல்யாணி ஆஸ்பத்திரி
ஏற்படுத்தி, இலவசமாக மகப்பேறு மருத்துவப்பணியைத்
துவக்கினார். அந்தத் தெய்வீகப்பணி, இன்றும் தொடர்ந்து
நல்ல முறையில் நடந்து வருகிறது என்றால்,
மகாப்பெரியவாளின் பேரருளே முக்கிய காரணம்.
 
அந்தக்காலத்தில், ஜெயப்பூர் மகாராஜாவின்
ஆதிக்கத்திலிருந்த (கபாலீஸ்வரர் கோவில் கிழக்கு
மாட வீதியிலிருந்து பிரியும் சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, ரஸிக ரஞ்ஜனி சபாவுக்கு எதிரில்) பெண்கள் பள்ளிக்கூடத்தை, தன் சொந்தப் பணத்தைக் கொண்டு வாங்கி, லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக’ மேம்படையச் செய்தார்.
 
பெரியவாளின் வாக்கு, வேதவாக்கு.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories