தேனி மாவட்டம் என்.ஆர்.டி நகரில் அமைந்துள்ளது பொன்ராஜா பள்ளி. இங்கு தமிழ் ஆசிரியராக வேலை பார்ப்பவர் தீபா, வயசு 28. இவரது வீடு PC பட்டியில் உள்ளது.
வழக்கமாக தீபா ஸ்கூட்டியில்தான் பள்ளிக்கு வந்து போவார். தலைக்கவசம் அணிந்து தான் வருவார். அதே போல் அப்படித்தான் சம்பவதினத்தன்று பள்ளி முடித்துவிட்டு தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வார சந்தை காரணமாக வரும் வழியில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.
அப்போது தீபாவின் ஸ்கூட்டி முன்னே இன்னொரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அதை கடக்க முயன்ற போது திடீரென தவறி விழுந்துவிட்டார்.அந்த நேரம் பார்த்து, குழந்தைகளை ஏற்றி கொண்டு பின்னாடியே வந்த ஒரு பள்ளி வேன், கீழே விழுந்த தீபாவின் தலையிலேயே ஏறி சென்றது.
இதில் சம்பவ இடத்திலேயே தீபா பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்கூட்டியில் இருந்து எப்படி தவறி விழுந்தாரோ, அதே நிலையிலேயே உயிர் பிரிந்துவிட்டது. இதுகுறித்து உடனடியாக தேனி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து டீச்சர் தீபாவின் சடலத்தை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வேன் டிரைவர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


