மாமியார் மெச்ச செய்யுங்க சேமியா அடை!

Published:

semiya 1 - 2026

சேமியா அடை

தேவையானவை:

சேமியா – ஒரு கப்,
புளித்த தயிர் – ஒரு கப்,
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) – 2,
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – ஒன்று,
கேரட் (துருவியது) – ஒன்று,
நறுக்கிய புதினா, கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வறுத்த சேமியாவை, ஒரு மணி நேரம் தயிரில் ஊற விடவும். ஒன்றரை மணி நேரம் கழித்து அதனுடன் இஞ்சித் துருவல், பச்சைமிளகாய், கேரட் துருவல், வெங்காயம், புதினா, கொத்தமல்லி, உப்பு நன்கு சேர்த்து அடை மாவு பதத்தில் கலக்கவும். சூடான தவாவில் மாவை வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுத்து, சூடாகப் பரிமாறவும்.

அனைத்துவிதமான சட்னி யுடனும் சாப்பிடலாம்.

Related articles

Recent articles

spot_img