
விஜயதசமி சிறப்பு: கோகுலம்வாழ் யாதவர்கள் தலைவர் நந்தகோபர்-யசோதா மாதாவிற்கும் பிறந்த பெண்தெய்வம், உலகத்தை காக்கும் ஜகன்மாதா பராசக்தி “துர்காதேவி”
வசுதேவர்-தேவகி மாதாவிற்கு எட்டாவது குழந்தையாக அவதரித்த கண்ணனை தனது நண்பரும் பங்காளியுமான கோகுலத்தலைவர் நந்தகோபரிடம் ஒப்படைத்துவிட்டு நந்தகோபர்-யசோதா மாதாவிற்கும் பிறந்த பெண்குழந்தையை பெற்றுகொண்டு சிறைச்சாலைக்கு திரும்பினார் வசுதேவர் (அந்த சிறைச்சாலை தற்போது கத்ர கேஷவ்தேவ் என்னும் கண்ணன்கோயிலாக உள்ளது)

தங்கை தேவகிக்கு குழந்தை பிறந்ததை அறிந்த கம்சன் குழந்தையை கொல்ல சிறைச்சாலை சென்றான். அன்னை தேவகியின் கையில் இருந்த யசோதா மாதாவின் பெண் குழந்தையை பறித்து சுவற்றில் ஓங்கி அடித்தான் கம்சன்.
அன்னை யசோதையின் பெண்குழந்தை ‘துர்கா தேவியாக’ உருவெடுத்து கம்சனின் அழிவை அறிவித்துவிட்டு மறைந்தாள்.

மறைந்த துர்காதேவி தன் கோபத்தை தணித்துக் கொள்ள சக்தி பீடம் அமைந்துள்ள விந்திய மலையில் வாசம் செய்து கோயில் கொண்டாள். அதனால் “விந்தியவாசினி” என்றும் அழைக்கப் பட்டாள்
நந்தகோபர்-யசோதா மாதாவின் மகளாக பிறந்த துர்காதேவி மும்பாயி, இருளாயி, கருப்பாயி, செல்லாயி, வீராயி, மாரி, காளி, மாயோள் என்று பாரதநாட்டில் பல்வேறு பெயர்களால் வணங்கப் படுகிறாள்

சைவமும் வைணவமும் ஆயர்களின் குழந்தைகள். சக்திதேவி துர்கையாகவும், ஶ்ரீதேவி ருக்மிணி தாயாராகவும், பூதேவி பாமா தாயாராகவும், ஆண்டாள் நாச்சியாராகவும் அவதரித்து ஆயர் குலம் விளங்கச் செய்தவர்கள்!
- மதுரை கா.ராஜேஷ்கண்ணா