
பெரும் பயறு சர்க்கரைப் பொங்கல்
தேவையான பொருட்கள்
பெரும் பயறு. -1 கப்
பச்சரிசி. _11/2 கப்
நாட்டு சர்க்கரை. -1/2 கிலோ
ஏலக்காய். -1/2 கிலோ
சுக்கு. 1 துண்டு
தேங்காய் துருவல். – 1 கப்
முந்திரிப் பருப்பு. – 10
உப்பு. -1 சிட்டிகை
நெய். -3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
பெரும் பயறை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசிலில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஏலக்காய், சுக்கு இரண்டையும் நன்றாக பொடித்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடி கனமான ஒருபாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் பச்சரிசியை வேக வைக்கவும்.
பச்சரிசி வெந்து வரும் போது அதனுடன் வேக வைத்த பெரும் பயறை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். பின்னர் இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். உப்பு சேர்த்து கொடுக்கவும்.பொடித்து வைத்திருக்கும் ஏலக்காய் சுக்கு தூள் சேர்த்து நன்குக் கிளறவும். வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து கிளறவும்.
எல்லாம் நன்றாக மிக்ஸ் ஆகி வரும் போது தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும்.
பொங்கலை அடுப்பில் இருந்து இறக்கும் போது மீதி இருக்கும் நெய் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். மிகவும் சுவையான மணமான பெரும் பயறு சர்க்கரைப் பொங்கல் ரெடி.