கிரிஸ்பி அன்ட் ஈஸி.. மைதா சீடை!

Published:

maitha sedai - 2026

மைதா சீடை
தேவையான பொருட்கள்
மைதா – ஒரு கிலோ
அரிசிமாவு – 2 ஆழாக்கு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – ஒன்று
எண்ணெய் – அரை லிட்டர்

செய்முறை
மைதாவை இட்லிச்சட்டியில் அவிக்கவும். அரிசி மாவை வறுக்கவும்.
மைதாவையும், அரிசிமாவையும் சலித்து கொள்ளவும்.
தேங்காயை ஆட்டி பாலெடுக்கவும். தேங்காய்ப்பாலை சூடாக்கி (கொதிக்காமல்) கொள்ளவும்.
மாவுடன் உப்பு, தேங்காய்ப்பால் விட்டு பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கட்டையில் பிழிந்தெடுத்து பொரித்தெடுக்கவும்.

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img