ஏப்ரல் 18, 2021, 10:52 காலை ஞாயிற்றுக்கிழமை
More

  ஆளாளுக்கு அள்ளிடுவாங்க.. ஆலு போஸ்தா!

  Alu Posto - 1

  ஆலு போஸ்தோ
  தேவையான பொருட்கள் :

  உருளைக்கிழங்கு மீடியம் சைஸ் :4
  கருஞ்சீரகம் : 1 டீஸ்பூன்
  கசகசா : 4 டீஸ்பூன்
  பச்சைமிளகாய் : 6
  காய்ந்த மிளகாய் : 2
  மஞ்சள்தூள் :2 சிட்டிகை அளவு
  நல்லெண்ணெய் : 4 டீஸ்பூன்

  செய்முறை :

  உருளைக்கிழங்கை தோல் சீவி கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  கசகசாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
  ஊறிய கசகசாவுடன் பச்சைமிளகாயை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.

  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருஞ்சீரகத்தை போடவும்.
  பொரிந்ததும் வெட்டிய கிழங்கு துண்டுகளைச் சேர்க்கவும்.
  கிள்ளிய காய்ந்தமிளகாய்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

  கிழங்கு சிவக்க ஆரம்பித்தவுடன் அரைத்த கசகசாவை சேர்க்கவும்.பச்சை வாடை போகும் வரை 3 நிமிடங்கள் கிளறி வதக்கி விடவும். அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு மூடிபோட்டு மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.3 நிமிடம் கழித்து திறந்து கிழங்கு நன்கு வெந்து விட்டதா என்று செக் செய்துவிட்டு நன்கு சுருள கிளறிவிட்டு இறக்கவும்.

  குழம்பு சாதத்துக்கு சைட்டிஷ்ஷாக தொட்டுக் கொள்ளலாம்.சப்பாத்தி,சுக்கா ரொட்டியுடனும் துணை சேரும்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,229FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,110FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »