ஆரோக்கிய சமையல்: வெந்தய பணியாரம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Dill Paniyaram - 2026

வெந்தய பணியாரம்

தேவையான. பொருட்கள் ;
இட்லி அரிசி இரண்டு டம்ளர்
வெந்தயம் கால் டம்ளர் அல்லது ஒரு கைப்பிடி அளவு வெந்தயம்.
செய்முறை
முதல் நாள் இரவே இரண்டையும் ஊற வைத்துவிட வேண்டும். பிறகு
அதை கிரைண்டரில் நன்றாக அரைத்து உப்பு கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். பிறகு அதனுடன் சிறிதளவு புளித்த இட்லி மாவை கலந்து வைக்கவும். இதை அன்று இரவு சாப்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.
நாம் அரைத்து வைத்த மாவு இரவிற்குள் நன்றாக புளித்து பணியாரம் செய்யும் பதத்திற்கு வந்துவிடும்.

ஸ்டவ்வில் பணியார கல்லை வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு அதில் எண்ணையை தடவ வேண்டும். கரண்டியில் மாவை எடுத்து சிறிது சிறிதாக ஊற்ற வேண்டும். பிறகு அதை மூடி வைக்கவும். பணியாரம் நன்றாக வெந்தபின் திருப்பிப் போடவும். பிறகு உங்களுக்குப் பிடித்தமான சிறிதளவு நெய்யை ஊற்றி ஒரு நிமிடம் மூடி வைக்கவும். பிறகு அதை தட்டில் எடுத்து வைக்கவும்.இது ஒரு சத்தான காலை மற்றும் இரவு டிபன் ஆகும்.

உளுந்து போட்டு செய்யும் பணியாரத்தை விட இது மிகவும் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

இந்தப் பணியாரம் உடல்நிலை சரி இல்லாதவர்களுக்கும் கொடுக்கலாம். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம். இதன்  செய்முறை மிகவும் எளிதானது. ஆனால் இதன் சத்து மிகவும் அதிகமானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.