ஆரோக்கிய சமையல்: பாவக்காய் மசாலா!

Published:

bitter gourd spice - 2026

பாவக்காய் மசாலா
தேவையான பொருட்கள்
பாவக்காய் – 2 கப்
வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)
சிவப்பு மிளகாய் – 4
தக்காளி -1
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் -சிறிது
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
மல்லித்தூள் -2 டீஸ்பூன்
கரமசாலா-1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு-1/2 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு -1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி வைத்துள்ள பாவகையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அத்துடன் சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம்மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிம்மில் வைத்து மூடி போட்டு நன்கு வதக்க வேண்டும். பாவக்காய் நன்கு வெந்தவுடன் அதனுடன் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், பாவக்காய் மசாலா/பொரியல் தயார்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

Related articles

Recent articles

spot_img