அண்ணாமலையார் கோயிலில்… பஞ்சாங்க படனம் நிகழ்ச்சி!

ஆன்மிகச் செய்திகள் லைஃப் ஸ்டைல்
panchanga patanam2 - 2026

இன்று பிலவ தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப் பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு ஆலயங்களிலும் பஞ்சாங்க படனம் எனப்படும் பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

panchanga patanam1 - 2026

தமிழ்ப் புத்தாண்டு பிலவ ஆண்டு (14.4.2021) புதன்கிழமை பிறந்ததை முன்னிட்டு, அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில், சம்பந்த விநாயகர் முன் புதிய பிலவ வருட பஞ்சாங்கம் படைக்கப்பட்டது. பின்னர், பஞ்சாங்க படனம் எனப்படும், பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலய சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கம் வாசித்து பூஜை செய்தனர்.

செய்தி: எஸ்.ஆர்.வீ. பாலாஜி, திருவண்ணாமலை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.