ஜம்முனு ஒரு மாம்பழ ஜாம்!

Published:

mango jam
mango jam

மாம்பழ ஜாம்

தேவையானவை:
தித்திப்பான பழுத்த மாம்பழங்கள் – 6, சர்க்கரை – 250 கிராம்,
மாம்பழ எசன்ஸ் – சில துளிகள்,
கேசரி ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை,
சோள மாவு – அரை டீஸ்பூன்,
சிட்ரிக் ஆசிட் – கால் டீஸ்பூன்.

செய்முறை:

மாம்பழங்களை சுத்தப்படுத்தி பிழிந்து கொள்ளவும். அடி கனமான பாத்திரம் (அ) நான்ஸ்டிக் கடாயில் மாம்பழக் கூழ், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், ஃபுட் கலர் சேர்த்து இளம் தீயில் கொதிக்கவிடவும். சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்க்கவும். சிறிது கெட்டியானதும் எசன்ஸை சேர்க்கவும். சிறிது ஜாமை ஒரு தட்டில் ஊற்றினால் அது ஓடாமல் நெகிழ இருக்கும் சமயத்தில் அடுப்பை அணைக்கவும் (ஜாம் போன்றவை செய்யும்போது அடுப்பை ‘சிம்’மில் வைத்தால் அடிபிடிக்காது).

Related articles

Recent articles

spot_img