நீங்க போட கிளம்பிட்டிங்களா? மாங்காய் அவல் வடகம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Mango Aval vadagam
Mango Aval vadagam

மாங்காய் அவல் வடகம்

தேவையானவை:
புளிப்பான மாங்காய் துருவல் – 2 கப், அவல் – 3 கப்,
வெங்காயம் – ஒன்று,
மிளகாய்த்துள் – அரை டீஸ்பூன்,
வேக வைத்த ஜவ்வரிசி – 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன் (தலை வடித்தது).

செய்முறை:
அவலை 2 கப் நீரில் ஊற வைக்கவும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு இதை ஒட்டப் பிழிந்து ஒரு பேஸினில் போடவும். இத்துடன் உப்பு, வேக வைத்த ஜவ்வரிசி, துருவிய மாங்காய், துருவிய வெங்காயம், மிளகாய்த்தூள் சேர்த்து கையால் நன்கு மசிக்கவும். பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது எண்ணெய் தடவி வடகத்தை சிறு நெல்லிக்காய் சைஸ் உருண்டைகளாக்கி பரத்தவும். வடகம் வெயிலில் காய்ந்து மொறுமொறுப்பானதும் எடுத்து எவர்சில்வர் டப்பாவில் சேமித்து வைக்கவும்.

காய்கறி கிடைக்காத சமயங்களில் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள இது கை கொடுக்கும். குறிப்பாக, மழைக்காலத்தில் இதை சாப்பிட… மிகவும் ருசியாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.