
முருங்கை பூ பாயாசம்
தேவையான பொருட்கள்
முருங்கை பூ – 50 kg
பால் – 250 ml
பாதாம் – 20 g
முந்திரி – 20 g
உலர் திராட்சை – 10 g
ஏலக்காய் – 4
நெய் – தேவையான அளவு
பனங்கற்கண்டு – தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாய்ல நெய் விட்டு மிதமான சூட்ல முருங்கை பூ பொன்னிறமா வறுத்து எடுத்து பொடி பண்ணி வச்சுக்கோங்க. அப்புறம் பாதாம், முந்திரி, உலர் திராட்சை எல்லாம் வறுத்து தனியா அரைச்சு எடுத்துக்கோங்க. இப்போ ஒரு பாத்திரத்துல பாலை நல்லா கொதிக்க வச்சு அதுல முருங்கை பூ பொடியை போட்டு நல்லா காச்சணும்.
அஞ்சு நிமிசம் கழிச்சு பாதாம், திராட்ச்சை, முந்திரி பவுடர் சேர்த்துட்டு, ஏலக்காய் பணங்கற்கண்டு தேவையான அளவு போட்டு சிம்ல வச்சு கிளரிகிட்டே இருக்கணும். நல்ல மணம் வந்தவுடன் ஸ்டவ் ஆப் பண்ணிடுங்க. இப்போ கம கம முருங்கை பூ பாயசம் ரெடி.



