
கோவிட் 19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று, இப்போது உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி வருகிறது. 2019ம் வரும் சீனாவின் வூஹான் நகரில் இருந்து உலக நாடுகளுக்குப் பரவியது.
வூஹானில் சீனா உயிரி ஆயுத சோதனைக் கூடத்தை வைத்துள்ளது என்பதும், சீனா ராணுவ ரீதியாக உலக நாடுகளை அடிமைப் படுத்த இந்த வைரஸை உருவாக்கி பரப்பி விட்டுள்ளது என்பதும் உலக நாடுகள் பலவும் கூறும் குற்றச்சாட்டாக உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையிலேயே பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்த முதல் அலையில் இருந்து தப்பினாலும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அதன் 2வது அலையில் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளன.
மேலும் படிக்க: உலகின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை நாடு! இந்தியாவில் ஏன் கொரோனா பாதிப்பு பெரிதாக இல்லை?!
‘சீனாவின் சதியே கொரோனா வைரஸ் தொற்று’ என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பல முறை குற்றம்சாட்டி வந்தார்.
படியுங்க: அன்று வேண்டுமென்றே… இன்று இயலாமையால்..! சீனா வைரஸ் பரவலுக்கு ட்ரம்ப் சொல்லும் காரணம்!
அதனை உறுதிப்படுத்தும் விதமாக கொரோனா வைரஸ் திட்டமிட்டு பரப்பப்பட்ட ஓர் உயிர்க்கொல்லி வைரஸ். அது சீனாவின் ராணுவ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதுதான் என்று, சீனாவின் தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் லு மெங் யான் கடந்த வருடத்திலேயே குறிப்பிட்டுச் சொன்னார். தற்போதும், அவர் இந்தத் தகவல்களை ஆதாரபூர்வமாக சொல்லி வருகிறார்.

| இதையும் படிக்க..: கொரோனா பரவலுக்கு காரணம் சீனா: ஹாங்காங் வைராலஜிஸ்ட் லி-மெங் யான் பரபரப்பு குற்றச்சாட்டு! |
அவரது தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஆஸ்திரேலிய நாட்டு பத்திரிக்கைகளும் இது குறித்து பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வந்தன. இது, உலக நாடுகள் பலவற்றுக்கும் சீனாவுக்கு எதிரான மனநிலையை கிளர்ந்தெழச் செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவிடம் சிக்கிய ஆவணங்கள் ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையையும் மீண்டும் சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது. கொரோனா வைரசின் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு சீனாவில் ஓரிரு நாட்களில் விசாரணை நடத்துகிறது. இந்த நிலையில் அமெரிக்க உளவுத்துறை புதிய ஆவணங்கள் சில தங்களிடம் அகப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ‘சீனாவில் கொரோனா தொற்று வெளிப்படுத்துவதற்கு சில மாதங்களுக்கு முன், சீனாவின் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தில் பணியாற்றும் மூன்று ஆராய்ச்சியாளர்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்’ எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், பாதிக்கப்பட்ட ஆய்வாளர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நேரம் மற்றும் அவர்களின் மருத்துவமனை வருகைகள் பற்றிய புதிய விவரங்களும் இடம்பெற்றிருப்பதால், வூஹான் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் வெளியேறி இருக்கும் என்பதற்கான வலுவான ஆதாரமாக இந்த அறிக்கை கருதப்படுகிறது. ‘இது கொரோனா வைரசின் தோற்றம் குறித்த, உலக சுகாதார அமைப்பின் விசாரணையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்’ என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
படிக்க: உயிரி ஆயுதப் போர்! மீண்டு விட்டதாகக் கூறிக் கொள்ளும் சீனாவின் மறுபக்கம்!



