கர்நாடகா ஸ்பெஷல்: புளி சொப்பு

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
huli chopu
huli chopu

ஹுளி சொப்பு

தேவையானவை:

நறுக்கிய கீரை (ஏதேனும் ஒரு வகை) – ஒரு கட்டு
கீறிய பச்சை மிளகாய் – 4
வேர்க்கடலை (வறுத்து, பொடித்தது) – ஒரு கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம் (நறுக்கியது) – 10
புளிக் கரைசல் – சிறிதளவு
வேக வைத்த துவரம்பருப்பு – ஒரு கப்
கடுகு – சிறிதளவு
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
வறுத்து பொடித்த தனியா – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தேவைக்கேற்ப

செய்முறை:

வாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு, கீறிய பச்சை மிளகாய், வெங்காயம் தாளித்து… சிவந்த பின் நறுக்கிய கீரையை அலசி சேர்க்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பின் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டு, வேக வைத்த துவரம்பருப்பு சேர்க்கவும். நன்கு கொதித்து வரும்போது இறக்கி… பொடித்த வேர்க்கடலை, தனியாத்தூள் சேர்த்தால்… ஹுளி சொப்பு (புளிப்புக் கீரை) தயார். ஓடும் பதத்தில் செய்யாது… கெட்டியாக, சற்று தளர்வாக செய்யவும்

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.