October 18, 2021, 12:26 pm
More

  ARTICLE - SECTIONS

  அட்ராசக்க.. உடல் பலம், மனநலம் தரும் அமுக்காரா!

  அமீக்காரா - 1

  உடலுக்கு வலிமை தரக்கூடிய மூலிகை அமுக்கரா! உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்கும் ‘ஆரோக்கிய மீட்பாளர்’ இது! ‘பெண்களுக்குத் துணை சதாவேரிக் கிழங்கு; ஆண்களுக்குத் துணை அமுக்கரா கிழங்கு’ எனும் மூலிகை மொழி, இதன் மருத்துவப் பெருமையைப் பறைசாற்றுகிறது.

  பெயர்க்காரணம்: அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், அசுவகந்தம், இருளிச்செவி, வராககர்ணி, கிடிச்செவி ஆகிய மாற்றுப் பெயர்களைக் கொண்டது அமுக்கரா. ‘கந்தம்’ என்றால் கிழங்கு என்ற ரீதியில் அசுவ‘கந்தம்’ என்றழைக்கப்படுகிறது. குதிரை (அசுவம்-குதிரை) பலத்தை வழங்கும் என்பதால் ‘அசுவ’கந்தா என்ற பெயர்.

  அடையாளம்: இரண்டு முதல் மூன்றடிவரை வளரும் செடி வகை. முட்டை வடிவம் கொண்ட இலைகளின் மேற்பரப்பில் மெல்லிய ரோம வளரிகள் காணப்படும். சிவப்பு நிறத்தில் சிறிய அளவிலான காய்களைத் தாங்கியிருக்கும். ‘விதானியா சோம்னிஃபெரா’ (Withania somnifera) எனும் தாவரவியல் பெயர் கொண்ட அமுக்கரா, ‘சொலானேசியே’ (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்தது.

  ‘விதானோலைட்’ (Withanolide), ‘விதாஃபெரின்’ (Withaferin), ‘சைடோஇண்டோசைட்ஸ்’ (Sitoindosides), ‘சோம்னிஃபெரைன்’ (Somniferine) போன்ற நலம் பயக்கும் வேதிப்பொருட்கள் இதில் உள்ளன.

  மன நலம், உடல் நலம் இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. மன நலம் நன்றாக இருந்தால்தான் உடல் நலமும் நன்றாக இருக்கும்.

  மனதில் உள்ள பிரச்சினைகள் உடலிலும், உடலில் உள்ள பிரச்சினைகள் மனதிலும் எப்போதும் பிரதிபலிக்கும். அதனால் இரண்டையும் சீராக வைத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அமுக்கரா கிழங்கு.

  உடலுக்கு ஊட்டமளித்து சக்தியையும், மனதிற்கு உற்சாகத்தையும் இது வழங்குகிறது. இந்த கிழங்கு கசப்பு சுவை கொண்டது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா சிறந்த மருந்து.

  பலகீனமான உடலுக்கு இது தெம்புதரும். இதய துடிப்பை சீராக்கும். மனஉளைச்சலில் இருந்து விடுதலைதரும். மூளை செல்களை தூண்டி அதிக புத்துணர்ச்சியை வழங்கும்.

  பயன்கள்

  1. அமுக்கிரா கிழங்கை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடல் உறுதி, அழகு, நீண்ட ஆயுள் பெறலாம்.
  2. அமுக்கிரா கிழங்கை பச்சையாக எடுத்து, பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, கண்டமாலை வீக்கம் போன்றவற்றிற்கு பற்றிடலாம்.
  3. அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் கரையும்.
  4. கிழங்கை பாலில் வேக வைத்து அலம்பி உலர்த்தி பின் பொடி செய்து, ஒரு வேளைக்கு 2-4 கிராம் வரை தேனில் கொடுக்க உடல் பருமன், வீக்கம், பசியின்மை நீங்கும்; நெய்யில் கொடுக்க உடலிற்கு வன்மை தரும்.
  5. அமுக்கிரா கிழங்கு பொடி – 1 பங்கு, கற்கண்டு – 3 பங்கு என சேர்த்து, காலையும் மாலையும் பசுவின்பாலுடன் 4கிராம் சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வன்மை பெறும்.

  6.பாலில் வேகவைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட அமுக்கரா சூரணத்தை, பாலில் கலந்து பருக, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அவற்றின் தரமும் அதிகரிக்கும். மனத்தைச் சாந்தப்படுத்தி ஆழ்ந்த உறக்கத்தை வரவழைக்கும் பானமாகவும் இந்த ‘அமுக்கரா-பால்’ பயன்படும்.

  7.தூக்க மாத்திரைகளை நாடுவதற்கு முன்னர், அமுக்கரா எனும் இயற்கை உறக்கம் உண்டாக்கியை முயலலாம். சந்தையில் கிடைக்கும் ஊட்டச்சத்துப் பொடிகளுக்கு மாற்றாக, அமுக்கரா பொடியோடு பாதாம், பனங்கற்கண்டு சேர்த்து, உடல் நலிவுற்றவர்களுக்கு ஊட்டமாக வழங்கலாம்.

  amukara ver - 2

  அமுக்கரா பொடி இரண்டு பங்குடன், கற்கண்டு பொடி ஆறு பங்கு சேர்த்து, அரைக் கரண்டியளவு தேனில் குழைத்து அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வர, பலவீனத்தால் ஏற்படும் நடுக்கம் மறையும். வாதம், கபம் பிறழ்வதால் ஏற்படும் நோய்களுக்கான அற்புதமான மருந்து அமுக்கரா. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சினைக்கு அமுக்கரா சார்ந்த மருந்துகள் பலன் தரக்கூடியவை.

  அமுக்கராவை நவீன அறிவியல் பல கோணங்களில் ஆராய்ச்சிசெய்து, அதன் நோய் எதிர்ப்பு ஆற்றலை அறிந்து வியப்பு கொள்கிறது. எயிட்ஸ் நோயாளிகளிடையே நடத்தப்பட்ட சித்த மருத்துவ ஆய்வில், அமுக்கரா சூரணத்தின் பங்கு சிறப்பு வாய்ந்தது. இதன் எதிர்-ஆக்ஸிகரணி தன்மை குறித்தும், மூளையின் நரம்புகளைப் பாதுகாக்கும் ஆற்றல் குறித்தும் நிறைய ஆய்வுகள் விவரிக்கின்றன.

  வயோதிகத்தில் ஏற்படக்கூடிய மறதியைத் தள்ளிப் போடும் ஆற்றல் இதற்கு இருக்கிறது. இதிலிருக்கும் ‘விதனலாய்டிற்கு’ மனப் பதற்றத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. புற்று நோய்க் கட்டிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது அமுக்கரா கிழங்கின் பேராற்றல்!

  நீர்முள்ளி விதை, குறுந்தொட்டிவேர், வெள்ளரி வேர், அமுக்கரா கிழங்குப் பொடி ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட்டுவர, விந்தணுக்கள் சார்ந்த குறைபாடுகள் நீங்கும். இதன் இலைகளுடன் மிளகு சேர்த்து தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து வழங்க, காய்ச்சலின் தீவிரம் தணியும்.

  பாலும் அமுக்கரா பொடியும்’ என்பதை நாற்பதைக் கடந்தவர்களுக்கான மூலிகை மந்திரமாகச் சொல்லலாம். அதே நேரத்தில், ஆண்களுக்கு உண்டாகும் பாலியல் பிரச்சினைகளுக்கான ‘மூலிகை வயாகராவாக’ மட்டுமே அமுக்கரா பார்க்கப்படுகிறது.

  ஆனால் அது மட்டுமல்லாமல், உடல் பலவீனம், பசியின்மை, இருமல், ரத்தக் குறைவு, வாயுக் கோளாறுகள், வாத நோய்கள் எனப் பல்வேறு பரிமாணங்களில் பயன்படக்கூடியது அமுக்கரா!

  அமுக்கரா கிழங்கு, பாதாம் பருப்பு, பிஸ்தா, சுக்கு, பனங்கற்கண்டு சேர்த்து பாலிலிட்டுக் கொதிக்க வைத்துப் பருக, உடலுக்கு உடனடியாக ஊட்டம் கிடைக்கும். நீரிழிவு போன்ற தொற்றா நோய்களின் பிடியில் நீண்ட நாட்களாகச் சிக்கித் தவிப்பவர்களின் உள்ளுறுப்புகள் சோர்ந்துவிடாமல் பாதுகாக்கும் தன்மை அமுக்கராவுக்கு உண்டு. நாட்பட்ட தோல் நோய்களுக்கு இதன் கிழங்கை வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தும் மருத்துவ நுணுக்கமும் சித்த மருத்துவத்தில் இருக்கிறது.

  அமுக்கரா கிழங்கு, ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, சிறுநாவற் பூ ஆகியவற்றுடன் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் ‘அமுக்கரா சூரணம்’ எனும் சித்த மருந்து, பல நோய்களுக்கான எதிரி! மற்ற மருந்துகளின் ஆற்றலை அதிகரிக்கவும், சில மருந்துகளைச் சுமந்து செல்லும் வாகனமாகவும் அமுக்கரா சூரணம் பயன்படுகிறது.

  இதன் கிழங்குடன் சில மூலிகைகள் சேர்த்து நல்லெண்ணெய்யை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் தலை முழுகும் எண்ணெய் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில் மாயங்கள் நிகழ்த்தும்.

  அமுக்கரா கிழங்கு பொடி, கேழ்வரகு மாவு, சுக்குத் தூள், கஸ்தூரி மஞ்சள் இணைந்த கலவையை, சாதம் வடித்த தண்ணீரில் குழைத்து வீக்கங்களின் மீது தடவி வர விரைவில் குணம் கிடைக்கும். அமுக்கரா, சிற்றாமுட்டி தாவரத்தின் உதவியுடன் தயாரிக்கப்படும் ‘அசுவகந்தாதி எண்ணெய்’, வெளிப்பிரயோகமாகப் பயன்படும் சிறந்த உடல்பிடி மருந்து.

  முதுமையில் இளமை காண அஸ்வகந்தாவின் தண்டத்தை சூரணம் செய்து அதனுடன் சமமற்ற அளவில் நெய்யையும் தேனையும் சேர்த்து ஒரு மாதம் சாப்பிட வேண்டும். உடலில் புதிய செல்கள் உற்பத்தியாகவும், ஆரோக்கியம் மேம்படவும் தினமும் அஸ்வகந்தா சூரணத்தை பால் அல்லது நெய் அல்லது தைலத்தோடு சேர்த்து உண்ண வேண்டும். இதை 15 நாட்கள் பின்பற்றலாம்.அரை ஸ்பூன் அஸ்வகந்தா உடன் நெல்லிக்காய் சாறு கலந்து தினமும் குடித்து வந்தால், உங்கள் சருமம் சுருக்கம் விழாமல் இளமையாக பராமரிக்கப்பட்டு நீண்டகாலம் அழகுடன் இருக்கலாம்.அஸ்வகந்தாவின் பலன்களைப் பற்றி அறிந்தவர்கள் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது.1. மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான அளவில் அஸ்வகந்தா அவை உண்ணும் போது எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.2. கர்ப்பிணி பெண்கள் இதனை சாப்பிடக்கூடாது.3. அஸ்வகந்தா தைராய்டை ஊக்குவிக்கும் என்று ஒரு ஆய்வு கூறியுள்ளது. ஆனால் அதனை நீண்ட காலத்திற்கு அதிகமாக உட்கொள்ளும் போது சில பேருக்கு தைராய்டு பிரச்சினைகள் ஏற்படும்.4. ரத்தக்கொதிப்பு, வயிற்றில் அல்சர் உள்ளவர்கள் இதனை பயன்படுத்த கூடாது.5. இயற்கையாகவே சிலருக்கு உடல் சூடான தன்மையைக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் அஸ்வகந்தா வை பயன்படுத்தினால் வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட வாய்ப்பு உள்ளது.6. சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களாக இருந்தாலும் அல்லது சில நாட்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்யப் போவதாக இருந்தாலும் இந்த மூலிகையை பயன்படுத்தக்கூடாது. அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.7. இந்த அஸ்வகந்தா மூலிகையானது லேசான மயக்கம் கொடுக்கும் தன்மை கொண்டது. ஆகவே தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் இதனை எடுத்துக்கொள்ளக் கூடாது. அது அதிகப்படியான தூக்கத்தை தந்துவிடும்.இந்த அஸ்வகந்தாவின் நன்மைகளை அறிந்து சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி முறையான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தால் அதற்கான பலன் நிச்சயம் உண்டு.

  தலைவலிக்கு பற்று போடும்போது சுக்குடன் அமுக்கிராங் கிழங்கையும் கலந்து வெந்நீர் விட்டு பற்று போட்டால் தலைவலி பெருமளவு குறையும்கிராம்பு 10 கிராம்,சிறுநாகப்பூ 20 கிராம்,ஏலக்காய் 30 கிராம்,இலவங்கப்பட்டை 40 கிராம்,இலவங்கப்பத்திரி 50 கிராம்,சீரகம் 60 கிராம்,கொத்தமல்லி 70 கிராம்,மிளகு 80 கிராம்,திப்பிலி 160 கிராம்,சுக்கு 320 கிராம்,பாலாவியலாக வேகவைத்துப் பக்குவப்படுத்தப்பட்ட சீமை அமுக்கராக்கிழங்கு 640 கிராம்இவை அனைத்தையும் நன்கு இடித்துப் பொடி செய்து ஒரு மெல்லிய துணியில் சலித்து வைத்துக்கொள்ளவும். இதுவே அமுக்கராச்சூரணம் ஆகும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,562FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-